கோவையில் மாநகராட்சி அலட்சியம்.. சகதியில் சிக்கிய சரக்கு வாகனம்! 3 வாரங்களாக இருளில் தவிக்கும் வடவள்ளி மக்கள்!
கோவையில் கனமழைக்கு நடுவே மாநகராட்சியின் அலட்சியத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சின்னவேடம்பட்டி DVP இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் பாதாள சாக்கடைப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலை மழையால் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஸ்டீல் நிறுவனத்திற்குப் பொருட்களை ஏற்றிச் சென்ற குட்டி யானை சரக்கு வாகனம் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஏராளமான தொழிலாளர்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்துவதால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, வடவள்ளி கருப்பசாமி முதலியார் வீதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாகத் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்துகள் மற்றும் திருட்டு அபாயம் அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சாலைகளைச் சீரமைக்கவும், தெருவிளக்குகளை உடனடியாகப் பழுதுபார்க்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.