AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Kohli Birthday Celebration: வெலிங்டனில் தரையிறங்கிய கோலி.. வாழ்த்து மழை பொழிந்த ரசிகர்கள்..!

Virat Kohli's 38th Birthday: இந்திய கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி தனது 38வது பிறந்தநாளை நியூசிலாந்தில் கொண்டாடுகிறார். விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாகமாக வாழ்த்தினர். முதல் ஒருநாள் போட்டியில் 74 ரன்கள் அடித்து பிறந்தநாள் பரிசளித்தார். கோலி ஒருநாள் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

Kohli Birthday Celebration: வெலிங்டனில் தரையிறங்கிய கோலி.. வாழ்த்து மழை பொழிந்த ரசிகர்கள்..!
கோலிக்கு ரசிகர்கள் வாழ்த்துImage Source: Screengrab
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Nov 2026 21:08 PM IST

இந்திய கிரிக்கெட்டின் கிங் என்று அழைக்கப்படும் விராட் கோலி (Virat Kohli) நியூசிலாந்தில் தனது 38வது பிறந்தநாளை இன்று அதாவது 2026 நவம்பர் 5ம் தேதி கொண்டாடி வருகிறார். வருகின்ற 2026 நவம்பர் 7ம் தேதி நடைபெறவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான (IND vs NZ) இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக வெலிங்டன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த கிங் கோலிக்கு, அங்குள்ள அவரது ரசிகர்கள் கோலாகலமாக வரவேற்பு அளித்தனர். விமானத்தின் படிக்கட்டுகளில் இருந்து விராட் இறங்கி வருவதைக் கண்டதும், விமான நிலையத்தில் கூடியிருந்த ரசிகர்கள் திடீரென “ஹேப்பி பர்த்டே டு யூ” பாடலை ஆரவாரமாகப் பாடத் தொடங்கினர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், வெறும் 51 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 74 ரன்கள் எடுத்த கோலி, தனது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே ரன் மழை பொழிந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

ALSO READ: நியூசிலாந்துடன் மோதல்.. வெலிங்டனில் இந்திய அணியின் சாதனை எப்படி..?

ரசிகர்களின் வாழ்த்து மழை:

விராட் கோலியும், சாம்பியன் பட்டங்களும்..

கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி மிகவும் வெற்றிகரமான ஜாம்பவானாகத் திகழ்கிறார். கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, 2 சாம்பியன்ஸ் டிராபிகள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 2 ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டனான கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் 40-ல் வெற்றி பெற்று, 17 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளார். இதுமட்டுமின்றி, கோலி 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 46.85 சராசரியில் 9,230 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 30 சதங்கள் மற்றும் 31 அரை சதங்கள் அடங்கும். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இந்தியாவுக்காக நான்காவது அதிக ரன்கள் எடுத்த வீரராகத் திகழ்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் 55 சதங்கள்:

ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு அடுத்தபடியாக, விராட் கோலி ஒரு மறுக்க முடியாத சாதனையை தன்வசம் வைத்துள்ளார். 318 போட்டிகளில் 306 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி, 58.84 சராசரியில் 15,183 ரன்கள் குவித்து, உலகின் 2வது அதிக ரன் குவித்த வீரராகத் திகழ்கிறார். இதில் 55 சதங்களும் 80 அரை சதங்களும் அடங்கும். டி20 போட்டிகளிலும், கோலி 125 இன்னிங்ஸ்களில் 48.69 சராசரியில் 4,188 ரன்கள் குவித்து, மூன்றாவது அதிக ரன் குவித்த வீரராக உள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 38 அரை சதங்களும் அடங்கும்.

ALSO READ: பேட் விலை முதல் நாயகி கனவு வரை.. விராட் கோலி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்கள்:

அனைத்து வடிவங்களிலும் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரராக விராட் கோலி திகழ்கிறார். கோலி 566 போட்டிகளில் 633 இன்னிங்ஸ்களில் 52.86 என்ற சிறப்பான சராசரியில் 28,601 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 86 சர்வதேச சதங்களும், 149 அரைசதங்களும் அடங்கும். ஆட்டமிழக்காமல் எடுத்த 254 ரன்களே அவரது சிறந்த தனிப்பட்ட ஸ்கோராகும். 38 வயதிலும், அதே உடற்தகுதியுடனும் ஆக்ரோஷத்துடனும் களத்தில் ரன்களைக் குவித்து வரும் விராட் கோலி, வரவிருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் அணியின் முக்கிய வீரராகத் தயாராகி வருகிறார்.

Follow Us