Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Virat Kohli

Virat Kohli

உலகின் தலைசிறந்த வீரர்களில் தற்போது விராட் கோலியும் ஒருவர். விராட் கோலி 1988ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி டெல்லியில் பிறந்தார். விராட் கோலியின் தந்தை பிரேம் கோலி ஒரு குற்றவியல் வழக்கறிஞர் மற்றும் தாயார் சரோஜ் கோலி ஒரு இல்லத்தரசி ஆவார். விராட் கோலிக்கு விகாஸ் கோலி என்ற அண்ணனும், பாவனா கோலி என்ற அக்காவும் உள்ளனர். விராட் தனது ஆரம்ப கல்வியை டெல்லியில் உள்ள விஷால் பார்தி பப்ளிக் பள்ளியில் பயின்றார். விராட் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு, அதற்கான தன்னை வளர்த்து கொண்டார். விராட் கோலியின் தனிப்பட்ட திறமையால் மிக விரைவில் டெல்லியின் 15 வயதுக்குட்பட்ட மற்றும் 17 வயதுக்குட்பட்ட அணிகளில் இடம்பிடித்தார். கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்டு 18ம் தேதி விராட் கோலி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதன்பிறகு, 2010ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டியிலும், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியிலும் அறிமுகம் ஆனார். விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் அதுவேகமாக 8,000, 9,000, 10,000, 11,000 மற்றும் 12,000 ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், சமீபத்தில் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 27,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்து, சச்சின் சாதனையை முறியடித்தார். அவர் தொடர்பான செய்திகளை காணலா

Read More

Virat Kohli: லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய கோலி.. மெஸ்ஸியுடன் மீட்டிங்கா..?

Virat Kohli - Lionel Messi: அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்று அதாவது 2025 டிசம்பர் 13ம் தேதி கொல்கத்தா வந்தடைந்தார். தொடர்ந்து, இரவு ஹைதராபாத்திலும், நாளை மறுநாள் மும்பைக்கும் செல்வார். இந்தநிலையில், கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் மெஸ்ஸி 22 நிமிடம் மட்டுமே இருந்தார்.

ICC Ranking ODI: முதல் இடத்தில் ரோஹித்.. அடுத்த இடத்தில் கோலி.. ஒருநாள் தரவரிசையில் கலக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்!

RoKo the Top 2: ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் நான்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே முதல் மற்றும் 2வது இடங்களில் உள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தவறவிட்டாலும் சுப்மன் கில் 5வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

2027 World Cup: ரோஹித், விராட்டுக்கு இடம் வேண்டும்.. பிசிசிஐயை வற்புறுத்தும் முன்னாள் தேர்வாளர்!

Virat Kohli - Rohit Sharma: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு அனுபவ வீரர்களுடன், மிடில் ஆர்டரில் உள்ள வீரர்களான சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் மட்டுமே தற்போது வரை உறுதியான இடத்தை பிடித்துள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் போன்றவர்கள் இந்தியாவுக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

Virat Kohli Dance: குல்தீப் எடுத்த முக்கிய விக்கெட்.. குஷியில் கோலி க்யூட் நடனம்..!

IND vs SA 3rd ODI: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்காக களமிறங்கிய குயின்டன் டி காக் 106 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். இது இவரது 23வது ஒருநாள் சதமாகும். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் குமார் சங்கக்காரவை சமன் செய்தார்.

விராட் கோலியின் தொடர் சதங்கள் – நொடியில் விற்றுத்தீர்ந்த 3வது போட்டிக்கான டிக்கெட்டுகள் – எகிறும் எதிர்பார்ப்பு

3rd ODI sold-out : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி அடுத்தடுத்து 2 சதங்களை அடித்து அசத்தினார். இதனால் அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதால், விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில விநாடிகளில் விற்றுத் தீர்ந்தன.

Virat Kohli Salary: விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும் விராட் கோலி.. ஒருநாள் சம்பளம் இவ்வளவா?

Vijay Hazare Trophy 2025-26: விஜய் ஹசாரே டிராபியின் லீக் ஸ்டேஜில் டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த எல்லா போட்டிகளிலும் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடுவாரா என்பது தெரியவில்லை. கிடைத்த தகவல்களின்படி, விராட் கோலி 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs SA ODI: 2462 நாட்களுக்கு பிறகு.. இந்திய அணிக்கு வெற்றியை தராத கோலியின் சதம்.. ரசிகர்கள் ஏமாற்றம்!

Virat Kohli Century: கோலியின் 53 ஒருநாள் சதங்களில், 8 சதங்கள் அடித்த போட்டிகள் மட்டுமே இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தன. அதாவது கோலி சதம் அடிக்கும் நேரத்தில் 85% இந்திய அணி வெற்றியை பெற்றுள்ளது. இதனால்தான் கோலியை சேஸ் மாஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறார்.

Virat Kohli Century: 53வது ஒருநாள் சதம்.. 84வது சர்வதேச சதம்.. மிரட்டும் விராட் கோலி..!

Virat Kohli's 53rd ODI Hundred: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு ஒருநாள் இன்னிங்ஸ்களில் 11 முறை சதம் அடித்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இவருக்குப் பிறகு தொடர்ச்சியான ஒருநாள் இன்னிங்ஸ்களில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் ஏபி டிவில்லியர்ஸ் ஆறு முறை சதம் அடித்துள்ளார்.

Virat Kohli: விஜய் ஹசாரே டிராபியில் விளையாட விருப்பம் இல்லை.. விலக முடிவெடுத்த விராட் கோலி!

Vijay Hazare Trophy 2025-26: விராட் கோலி கடைசியாக விஜய் ஹசாரே டிராபி போட்டியில் 16 ஆண்டுகளுக்கு முன்பு, 2010ம் ஆண்டு விளையாடினார். 2008 முதல் 2010 வரை விராட் கோலி டெல்லி அணிக்காக 13 விஜய் ஹசாரே டிராபி போட்டிகளில் விளையாடி, 4 சதங்கள் உட்பட மொத்தம் 819 ரன்கள் எடுத்தார்.

IND vs SA: தேர்வாளருடன் பேசிய கோலி.. தனியாக உட்கார்ந்திருந்த கம்பீர்.. இந்திய அணிக்குள் சிக்கலா?

Pragyan Ojha - Virat Kohli: இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 3ம் தேதி ராய்ப்பூரில் நடைபெறவுள்ளது. முன்னதாக, கடந்த 2025 நவம்பர் 30ம் தேதி ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் விராட் மற்றும் ரோஹித் சர்மா அற்புதமான இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்தனர்.

Gautam Gambhir: கண்டு கொள்ளாத கோலி.. ரோஹித்துடன் விவாதம்.. கம்பீருக்கு எதிராக திரும்பும் இந்திய அணி..?

Indian Cricket Team: ராஞ்சி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி ஹோட்டலுக்கு வந்தபோது, ​​மொத்த அணியினரும் கேக் வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது விராட் கோலி நேராக தனது அறைக்குச் சென்றார். இதனை தொடர்ந்து, கவுதம் கம்பீர் ரோஹித் சர்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

Virat Kohli: ராஞ்சியில் அதிரடி சதம்! டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் களமா? விராட் கோலி விளக்கம்!

Virat Kohli Test Returns: விராட் கோலியின் சதத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில்,  சமீபத்தில் ஓய்வு பெற்ற அனுபவ வீரரான டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தற்காலிகமாகத் திரும்புமாறு பிசிசிஐ வேண்டுகோள் விடுக்கலாம் என்று கூறப்பட்டது.

IndvsSA : மாஸ் காட்டிய கோலி, குல்தீப்… தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி

Virat Kohli : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவு செய்தது. குல்தீப் யாதவ் மற்றும் ஹர்ஷத் ரானாவின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

IND vs SA: சச்சின் சாதனையை முறியடித்து விராட் கோலி புதிய உலக சாதனை – கொண்டாடும் ரசிகர்கள்

Virat Kohli Sets Record : விராட் கோலி கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 102 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என சதம் அடித்த அவர், சச்சினின் சாதனையை முறியடித்தார்.

IndvsSA: ரோகித் சர்மா உலக சாதனை…. விராட் கோலி அதிரடி 50… வலுவான நிலையில் இந்தியா

Rohit Sets Record : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். அவர் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 352 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.