Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் இதுவரை.. படைக்கப்பட்ட முக்கிய சாதனைகள் விவரம்!

T20 World Cup Records: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வைத்திருக்கிறார். இவர் இதுவரை உலகக் கோப்பையில் 35 போட்டிகளில் விளையாடி 15 அரைசதம் மற்றும் ஒரு சதம் உள்பட 1,292 ரன்கள் குவித்துள்ளார்.

T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் இதுவரை.. படைக்கப்பட்ட முக்கிய சாதனைகள் விவரம்!
டி20 உலகக் கோப்பை சாதனைகள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Feb 2026 10:00 AM IST

கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 10வது டி20 உலகக் கோப்பை 2026 (2026 T20 World Cup) வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்தமாக 20 அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்தியாவும் (Indian Cricket team) ஆஸ்திரேலியாவும் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் பரபரப்பான இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நடப்பு சாம்பியனான இந்தியா இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்தநிலையில், 2007ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை நடந்த டி20 உலகக் கோப்பையில் படைக்கப்பட்ட முக்கியமான சாதனைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: 2007 T20 WC அரைசதம்.. 2026 T20 WC-ல் ஆதிக்கம்.. 12 ஆண்டுகளுக்கு பிறகு களம் காணும் அனுபவ வீரர்!

டி20 உலகக் கோப்பையில் தொடர் ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள்:

  • ஷாஹித் அப்ரிடி – 2007
  • திலகரத்னே தில்ஷன் – 2009
  • கெவின் பீட்டர்சன் – 2010
  • ஷேன் வாட்சன் – 2012
  • விராட் கோலி – 2014
  • விராட் கோலி – 2016
  • டேவிட் வார்னர் – 2021
  • சாம் கர்ரன் – 2022
  • ஜஸ்பிரித் பும்ரா – 2024

டி20 உலகக் கோப்பையில் அதிக முறை சாம்பியன் வென்ற அணிகள்:

  • வெஸ்ட் இண்டீஸ் – 2012 மற்றும் 2016
  • இங்கிலாந்து – 2010 மற்றும் 2022
  • இந்தியா – 2007 மற்றும் 2024

ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக வெற்றிகள்:

  • 8 – இந்தியா – 2024
  • 8 – தென்னாப்பிரிக்கா – 2024
  • 6 – இலங்கை – 2009
  • 6 – ஆஸ்திரேலியா – 2010
  • 6 – ஆஸ்திரேலியா – 2021

ஒரு டி20 உலகக் கோப்பையில் எகானமி பந்துவீச்சாளர்கள்:

  • 4.17 – ஜஸ்பிரித் பும்ரா – 2024
  • 4.60 – சுனில் நரைன் – 2014
  • 5.20 – வனிந்து ஹசரங்க – 2021
  • 5.32 – ஷாஹித் அப்ரிடி – 2009
  • 5.33 – டேனியல் வெட்டோரி – 2007

ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள்

  • 17 – ஃபசல்ஹக் ஃபரூக்கி – 2024 – ஆப்கானிஸ்தான்
  • 17 – அர்ஷ்தீப் சிங் – 2024 – இந்தியா
  • 16 – வனிந்து ஹசரங்க – 2021 – இலங்கை
  • 15 – அஜந்தா மெண்டிஸ் – 2022 – இலங்கை
  • 15 – ஜஸ்பிரித் பும்ரா – 2024 – இந்தியா

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள்:

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வைத்திருக்கிறார். இவர் இதுவரை உலகக் கோப்பையில் 35 போட்டிகளில் விளையாடி 15 அரைசதம் மற்றும் ஒரு சதம் உள்பட 1,292 ரன்கள் குவித்துள்ளார். இதுமட்டுமின்றி, 2014ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த உலகக் கோப்பையின் போது 6 இன்னிங்ஸ்களில் 319 ரன்கள் எடுத்த பிறகு, ஒரே தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையையும் கோலி படைத்தார். மேலும், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக 50-க்கும் மேற்பட்ட ரன்கள் (15) எடுத்துள்ள சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

ALSO READ: வீரர் முதல் பிராண்ட் தூதர் வரை.. டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா கடந்து வந்த பாதை!

அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர்:

2007ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் கென்யாவுக்கு எதிராக 260/6 ரன்கள் எடுத்ததன் மூலம் இலங்கை டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளது. இதற்கிடையில், 2014ம் ஆண்டு சட்டோகிராமில் இலங்கைக்கு எதிராக 39 ரன்களுக்கு நெதர்லாந்து அணி ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோரை நெதர்லாந்து அணி பதிவு செய்தது.