AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நடிகர் கார்த்தியின் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த தீரன் அதிகாரம் ஒன்று 9 ஆண்டுகளை நிறைவு செய்தது – படக்குழு வெளியிட்ட பதிவு!

9 Years Of Theeran Adhigaaram Ondru | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்து வெளியான படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

நடிகர் கார்த்தியின் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த தீரன் அதிகாரம் ஒன்று 9 ஆண்டுகளை நிறைவு செய்தது – படக்குழு வெளியிட்ட பதிவு!
தீரன் அதிகாரம் ஒன்றுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Nov 2026 19:20 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி (Actor Karthi). இவரது நடிப்பில் தமிழ் மொழியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக அளவில் பிசியாக வலம் வரும் நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்து தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும் நடிகர் கார்த்தியின் நடிப்பில் தமிழ் சினிமாவிலும் படங்கள் வரிசையாக வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடிகர் கார்த்தி நடித்து வரும் நிலையில் அவரது நடிப்பில் முன்னதாக வெளியான படங்களையும் தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் ஆக்‌ஷன் பேக்டு படமாக உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி காவல்துறை அதிகாரியாக நடித்து இருப்பார். அவருக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த தீரன் அதிகாரம் ஒன்று 9 ஆண்டுகள் நிறைவடைந்தது:

இந்தப் படத்தை இயக்குநர் எச். வினோத் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் கொள்ளையர்கள் தமிழ் நாட்டில் ஆல் அரவம் இல்லாத இடத்தில் உள்ள வீடுகளில் உள்ள நபர்களை கொலை செய்துவிட்டு அங்கு கொள்ளை அடித்து செல்வார்கள். இதனை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக நடிகர் கார்த்தி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழு ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளனர். அது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… டிடிஃஎப் வாசன்-ஐ வேண்டுமென்றே வம்புக்கு இழுத்த முனியம்மாள் – கோபத்தில் கொதித்தெழுந்த டிடிஃஎப் வாசன்!

தீரன் அதிகாரம் ஒன்று படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அல்லகலோவா அஸ்ஸி பாவா… மேடையில் ஒன்றாக இணைந்து நடனமாடிய டான்ஸிங் குயின்ஸ் சாய் பல்லவி – ஸ்ரீலீலா!

Follow Us