நோ பொங்கல் ரிலீஸ்… இந்தியன் 3 படம் குறித்து வெளியான அப்டேட்!
Indian 3 Movie Release Update Here | தமிழ் சினிமாவில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 3 படத்தின் வெளியீடு பொங்கல் பண்டிகைக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்தப் படத்தின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan). இவரை தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவரை உலக ரசிகர்கள் அனைவரும் உலக நாயகன் கமல் ஹாசன் என்று கொண்டாடி வருகின்றனர். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. சினிமாவில் ஒரு படம் எடுக்க எத்தனை துறைகள் இருக்கிறதோ அந்த துறைகள் அனைத்திலுமே மாஸ்டராகவே இவர் இருக்கிறார் என்பது ரசிகர்களிடையே உள்ள கருத்து என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவிற்காகவே தனது வாழ்க்கையை அற்பணித்து உள்ளார் நடிகர் கமல் ஹாசன்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள படம் தொடர்பான அப்டேட்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் அடுத்ததாக தமிழ் மொழியில் வெளியாக உள்ள படம் இந்தியன் 3. இந்தப் படத்தின் முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் இரண்டாம் பாகம் படு தோல்வியை சந்தித்தது மட்டும் இன்றி இணையத்தில் ரசிகர்களால் அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.




இந்தியன் 3 படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லையா?
இந்த நிலையில் இந்தியன் 3 படம் வெளியாகும் என்பதை இரண்டாம் பாகத்திற்கான புரமோஷனின் போதே படக்குழு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, இந்தியன் 3 திரைப்படம் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியாகாது என்று கூறப்படுகிறது. கமல்ஹாசனுக்கும், லைகா புரொடக்ஷன்ஸின் பொறுப்பாளர் தமிழ் குமரனுக்கும் இடையே நல்லுறவு நீடிக்கிறது; அவர்களுக்கிடையிலான பிணைப்பு இன்னும் வலுவாகவே உள்ளது. சொல்லப்போனால், கமல்ஹாசனுக்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து இனிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
கமல்ஹாசன் தனது டப்பிங் பணிகளை ஓராண்டுக்கு முன்பே முடித்துவிட்டார். தற்போது இயக்குநர் ஷங்கர் படத்தின் படத்தொகுப்பு (editing) பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 2027 பொங்கல் பண்டிகைக்கு ஏற்கனவே பல படங்கள் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளதால், ‘இந்தியன் 3’ திரைப்படத்தை 2027 பிப்ரவரி மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
Also Read… 24 வருசத்துக்கு முன்னாடி நாகேஷ் சார் கொடுத்த அட்வைஸ் இப்போ யூஸ் ஆச்சு – தனுஷ் சொன்ன விசயம்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Indian3 is reportedly NOT releasing for Pongal 2027. #KamalHassan and LYCA Productions’ head TamilKumaran are said to be on very good terms, with their relationship remaining intact. In fact, Kamal Haasan sir even received sweets from the TFPC.
#KamalHassan had completed his dubbing formalities nearly a year ago, while director #Shankar is currently working on the film’s editing.
With several films already lined up for Pongal 2027, the team may reportedly be considering a February 2027 theatrical release.
Source – Touring Talkies https://t.co/1NVdgleN86
— Movies Singapore (@MoviesSingapore) November 15, 2026
Also Read… ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை ஒத்திவைத்தது சத்யவான் சாவித்ரி படக்குழு – வெளியானது அப்டேட்