AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சீன் படத்தில் அந்த காட்சியை இவ்வளவு அன்புடன் கொண்டாடியதற்கு நன்றி – நடிகர் சூர்யா!

Actor Suriya Thanks To Fans | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் சீன். இந்தப் படத்தில் வரும் காட்சி ஒன்றை ரசிகர்கள் கொண்டாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் சூர்யா தெரிவித்துள்ளார்.

சீன் படத்தில் அந்த காட்சியை இவ்வளவு அன்புடன் கொண்டாடியதற்கு நன்றி – நடிகர் சூர்யா!
ஜோதிகா மற்றும் சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Nov 2026 15:40 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்துள்ளது கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் சீன் ஆகியப் படங்கள். இந்த ஆண்டில் வரிசையாக வெளியான இந்த மூன்று படங்களும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இறுதியாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் சீன். இந்தப் படத்தினை நடிகர் சூர்யா – ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்து உள்ளது. இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக படக்குழுவினர் மற்றும் நடிகர்களின் பங்களிப்பிற்காக நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சீன் படத்தில் அந்த காட்சியை இவ்வளவு அன்புடன் கொண்டாடியதற்கு நன்றி:

இந்த நிலையில் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் சூர்யா அவரது ரசிகர்களுக்கு குறிப்பாக அனைத்து மொழிகளிலும் உள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் நடிகர் சூர்யா பேசியதாவது, அனைத்துத் திரைகளிலும், அனைத்துத் திரையரங்குகளிலும், எல்லா மொழிகளிலும் நீங்கள் வழங்கிய கைதட்டல்களுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி – அவளையும், எங்களையும், எங்கள் பயணத்தையும் இவ்வளவு அன்புடன் கொண்டாடியதற்கு நன்றி என்று சூர்யா தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஓ.எம் படத்திற்காக சாய் பல்லவி செய்த சூப்பர் சம்பவம்… வியக்கும் ரசிகர்கள்!

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… இது பிக்பாஸ் வீடா இல்ல வன்ம குடோனா? லக்‌ஷ்மி பிரியா – முனியம்மாள் இடையே முற்றிய வாக்குவாதம்!

Follow Us