இயக்குநர் ஹரியின் அடுத்தப் படத்தின் நாயகன் இவரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்
Director Hari Next Movie Hero Update | தமிழ் சினிமாவில் பல ஆக்ஷன் படங்களை இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருபவர் இயக்குநர் ஹரி. இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பிறகு இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் ஹரி (Director Hari). இவர் கடந்த 2002-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் தனது இயக்குநர் பயணத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் பிரசாந்த நாயகனாகவும் நடிகை சிம்ரன் நாயகியாகவும் நடித்த படம் தான் தமிழ். இந்தப் படம் வெளியானது போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சிங்கம், வேங்கை, சிங்கம் 2, பூஜை, சிங்கம் 3, சாமி 2, யானை மற்றும் ரத்னம் என அனைத்தும் படங்களும் ஆக்ஷன் ட்ராமா பாணியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விக்ரம், விஷால், சூர்யா, சிலம்பரசன், தனுஷ் மற்றும் அருண் விஜய் என அனைவரின் சினிமா கெரியரில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான படங்கள் ஆக்ஷனில் சிறந்த படங்களாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வரும் இயக்குநர் ஹரி இறுதியாக கடந்த 2024-ம் ஆண்டு ரத்னம் படத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




இயக்குநர் ஹரியின் அடுத்தப் படத்தின் நாயகன் இவரா?
தொடர்ந்து ஹரி இயக்கத்தில் படங்கள் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகும் நிலையில் அடுத்ததாக அவரது இயக்கத்தில் உருவாக உள்ள படம் தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி, ஹரி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடிப்பதற்காக அதர்வா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் நெட்ஃபிக்ஸ் இணையத் தொடரின் படப்பிடிப்பில் அதர்வா ஈடுபட்டுள்ளார். அந்தத் தொடரின் படப்பிடிப்பு முடிந்ததும், அவர் ஹரியுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட படைப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Also Read… Suriya: சூரா சூரா.. 2 ஆண்டுகளை கடந்தது சூர்யாவின் கங்குவா திரைப்படம்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Atharvaa is in talks to star in a film directed by #Hari. 🤝
Atharvaa is currently shooting for a Netflix web series directed by #KarthikSubbaraj. Following its completion, he is expected to team up with Hari for a new film.
The upcoming project is said to be a Family Entertainer! ⭐
— Movie Tamil (@_MovieTamil) November 14, 2026