AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அந்தப் படம் வெற்றியடையுமா என்று பயந்துகொண்டே இருந்தேன் – இயக்குநர் சுந்தர் சி

Sundar C talks about Aranmanai 2 movie | தமிழ் சினிமாவில் ஒரு ஹாரர் காமெடி படத்தை பல பாகங்களாக தொடர்ந்து எடுத்து மக்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்ற இயக்குநராக உள்ளவர்தான் இயக்குநர் சுந்தர் சி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி வைரலாகி வருகின்றது

அந்தப் படம் வெற்றியடையுமா என்று பயந்துகொண்டே இருந்தேன் – இயக்குநர் சுந்தர் சி
சுந்தர் சிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Nov 2026 07:12 AM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராகவு, நாயகனாகவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருபவர் சுந்தர் சி (Sundar C). இவர் தொடர்ந்து படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்குவதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான இயக்குநராக மட்டும் இன்றி நாயகனாக வலம் வரும் இவரது இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் 2 படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகமான மூக்குத்தி அம்மன் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி எழுதி இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியான மூக்குத்தி அம்மன் 2 படம் முதல் பாகத்தை போல மாபெரும் வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல தொழில்நுட்பங்களை வைத்து இந்தப் படம் இயக்கி இருந்தாலும் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் சுந்தர் சி சமீபத்திய பேட்டி ஒன்றில் அரண்மனை 2 படத்தின் வெற்றியைக் குறித்து தான் பயந்ததாக தெரிவித்தது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அந்தப் படம் வெற்றியடையுமா என்று பயந்துகொண்டே இருந்தேன்:

அதன்படி இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது, அரண்மனை 2 படத்தின் முடிவைப் பற்றி நான் மிகவும் பயந்தேன். ஏனெனில், அரண்மனை தொடர் ஏற்கனவே உருவாக்கியிருந்த மதிப்பைப் பற்றி எனக்குத் தெரிந்திருந்தது. படம் வெளியீட்டிற்குத் தயாராக இருந்தது, ஆனால் என்னால் அதன் முதல் பிரதியை (first copy) வெளியீட்டு நாளன்று இரவுதான் பார்க்க முடிந்தது. அதைப் பார்த்தபோது, ​​அதில் சில தொழில்நுட்பக் குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தேன். அவற்றைச் சரிசெய்திருந்தால், திருத்தப்பட்ட பிரதி திரையரங்குகளைச் சென்றடைய மேலும் ஒரு நாள் ஆகியிருக்கும்.

படம் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தத் தொடரைத் தொடர்ந்து கொண்டு செல்ல முடியும் என்பதால், அதன் முடிவைப் பற்றி நான் மிகுந்த பதற்றத்துடன் இருந்தேன். அப்போதுதான் என் மனைவி குஷ்பு என்னிடம் அழுதுகொண்டே வந்தார். முதலில் அவர் ஏதோ வருத்தத்தில் இருக்கிறார் என்று நினைத்தேன், ஆனால் அவர் படத்தின் கிளைமாக்ஸைப் பார்த்துவிட்டு, மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். திரையரங்கில் ரசிகர்கள் கைதட்டுவதைக் கண்ட அவர் உணர்ச்சிவசப்பட்டார். குறிப்பாக, அவரும் அந்தப் படத்தில் ஒரு கலைஞராகப் பணியாற்றியிருந்ததால், அந்த உணர்வு இன்னும் தீவிரமாக இருந்தது.

அரண்மனை திரைப்படத் தொடர் எப்போதும் எனக்கு ஒரு பாதுகாப்பான தேர்வாக இருக்கும். இருப்பினும், என்னால் தொடர்ந்து அடுத்தடுத்து அரண்மனை படங்களை உருவாக்க முடியாது. ஒவ்வொரு பாகத்திற்கும் இடையில் குறைந்தது 3 முதல் 4 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… இது மலையாளத் திரைப்படத்துறைக்கு நாங்கள் சமர்ப்பிக்கும் ஒரு சிறிய காதல் கடிதம்… நடிகர் சூர்யாவின் எமோஷ்னல் பதிவு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சியான் விக்ரமின் பவர்ஹவுஸ் படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

Follow Us