AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்.. அலை அலையாய் குவியும் பக்தர்கள்.. களைகட்டிய மாநகர்!!

Tiruchendur Kanda Shanthi Festival 2026: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் திருச்செந்தூர் மாநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்.. அலை அலையாய் குவியும் பக்தர்கள்.. களைகட்டிய மாநகர்!!
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 15 Nov 2026 07:20 AM IST

தூத்துக்குடி, நவ.15: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடலோரச் சூழலில் அமைந்துள்ள முத்துக்குமாரசுவாமியின் திருத்தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கந்தசஷ்டி திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது. திருவிழாவின் ஒவ்வொரு நாளும் முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்பட்டு வீதியுலா காட்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் மிக முக்கியமான மற்றும் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை கடற்கரையில் நடைபெற உள்ளதை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் மாநகரில் குவிந்துள்ளனர்.

இதையும் படிக்க: திருச்செந்தூர் சூரசம்ஹார விழா – சாதி ரீதியான அடையாளங்களுக்கு தடை – காவல்துறை கடும் எச்சரிக்கை

பக்தர்களின் வசதிக்காக சிறப்பான ஏற்பாடுகள்:

சூரசம்ஹார நிகழ்வைக் காணவரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் அறநிலையத்துறை சார்பில் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக 11 இடங்களில் பிரம்மாண்டமான கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காகச் சிறப்புச் சிற்றுந்துகள் இயக்கப்படுவதுடன், ஆங்காங்கே குடிநீர் வசதிகள், சுகாதாரப் பணிகள் மற்றும் தடையற்ற போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் எந்தவிதத் தடையுமின்றி எளிதில் கடல்தீர்த்தம் மற்றும் கோயிலை அடைய ஏதுவாகப் பிரத்யேக வழிகள் அமைக்கப்பட்டுளன.

பாதுகாப்புப் பணிகளும், கண்காணிப்பு முறைகளும்:

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 4,200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோயிலைச் சுற்றியும் கடற்கரைப் பகுதிகளிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு, 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூட்ட நெரிசலைக் கண்காணிக்கவும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் நவீன ட்ரோன் கேமராக்கள் மூலம் கோயில் வளாகம் முழுவதுமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்புக்கு முதலிடம் அளிக்கும் வகையில் காவல்துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் திறம்பட மேற்கொண்டுள்ளது.

இதையும் படிக்க: மிரட்டும் தோற்றம்.. பிரம்மாண்ட உருவம்.. சூரசம்ஹாரத்துக்கு தயாராகும் அசுரர் பொம்மைகள்.. பழனியில் பணிகள் தீவிரம்!

ஆன்மீக பக்தி பரவசமும் பக்தர்களின் அனுபவங்களும்:

அதிகாலையிலேயே கடலில் புனித நீராடி, 6 நாட்கள் விரதத்தை நிறைவு செய்யும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர். கல்வி, தொழில் வளர்ச்சி மற்றும் குடும்ப நலனுக்காக முருகனிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் பலர், தங்களது பிராத்தனைகள் நிறைவேறியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். தூய்மையான குடிநீர், உடனடித் தூய்மைப் பணிகள் மற்றும் சிறப்பான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இன்றைய சூரசம்ஹார நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பத் தொலைக்காட்சி நிறுவனங்களும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

Follow Us