AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மிரட்டும் தோற்றம்.. பிரம்மாண்ட உருவம்.. சூரசம்ஹாரத்துக்கு தயாராகும் அசுரர் பொம்மைகள்.. பழனியில் பணிகள் தீவிரம்!

Soorasamharam Asura Effigies Preparation : சூரசம்ஹார நிகழ்வையொட்டி, பழனி பால தண்டாயுதபானி முருகன் கோயிலில் அசுரர்கள் உருவ பொம்மைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், மூங்கில், பேப்பர், காதிதக்கூழ் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் தயார் செய்யப்பட்டு வருகிறது.

மிரட்டும் தோற்றம்.. பிரம்மாண்ட உருவம்.. சூரசம்ஹாரத்துக்கு தயாராகும் அசுரர் பொம்மைகள்.. பழனியில் பணிகள் தீவிரம்!
அசுரர் பொம்மைகள் தயாரிக்கும் பணி. (கோப்புப்படம்)
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 14 Nov 2026 16:13 PM IST

தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 15- ஆம் தேதி) நடைபெறுகிறது. இதில், சூரபத்மனை முருகர் வதம் செய்யும் நிகழ்வு முக்கிய நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வு தமிழகத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவில்கள் உள்ளிட்ட பிற முருகன் கோவில்களிலும் நடைபெறும். இதில், ஆறுபடை வீடுகளில் 3- ஆம் படை வீடான பழனி பால தண்டாயுதபாணி முருகன் கோவிலிலும் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதற்கான, முன்னேற்பாட்டு பணிகளை கோவில் நிர்வாகம் தரப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக அசுரர் உருவ பொம்மைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பழனி முருகன் கோயிலில் அசுரர் பொம்மை தயாரிக்கும் பணி

பழனி பெரிய நாயகி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் இந்த பணியில் பழனியை சேர்ந்த ராமசாமி மகன் குமரேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது குடும்பத்தினர் கடந்த 3 தலைமுறைகளாக பழனி முருகன் கோவிலுக்கு அசுரர்கள் உருவ பொம்மைகளை தயார் செய்து கொடுத்து வருகின்றனர். இதற்காக மூங்கில் மற்றும் காய்ந்த புள், காகித கூழ், செய்தித்தாள்கள், பட்டாசுகள் மற்றும் வெடி மருந்துகள் பல்வேறு வகையான வண்ணப் பொடிகள், பசை, களிமண், துணி ஆகியவை மூலமாக தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு! – முன்பதிவு எப்போது?

மூங்கில், களிமண், காதிதக் கூழ் உள்ளிட்ட பொருள்களால்…

முதலில் மூங்கில் மூலமாக பொம்மைக்கான உடல் அமைப்பு உடைய கூடு செய்யப்பட்டு அதனை சுற்றிலும் களிமண்ணால் உருவம் அமைக்கப்பட்டு, சுற்றிலும் பேப்பர்கள் ஒட்டப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, பொம்மைக்கான தலை, கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அமைக்கப்பட்டு, வண்ண கலர்கள் பூசப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், அசுரர்களின் உடல், கை, கால்கள், தலை உள்ளிட்ட உடல் உறுப்புகளை தனியாக தயாரித்து அதனை இணைத்து பெரிய அளவிலான உருவ பொம்மை தயாரிக்கும் பணிகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.

கோயிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வு

இந்தப் பணிகள் முடிவடைந்ததும் அசுரர்களின் உருவ பொம்மைகள் பழனி பால தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்படும். இதைத் தொடர்ந்து, அந்த பொம்மைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சூரசம்ஹாரம் நிகழ்வில் கொண்டுவரப்படும். இதைத் தொடர்ந்து, சன்னிதானத்தில் இருந்து எழுந்தருளும் முருகப்பெருமான் களத்துக்கு வந்து சூரபத்மனை வதம் செய்து சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க: திருச்செந்தூர் சூரசம்ஹார விழா – சாதி ரீதியான அடையாளங்களுக்கு தடை – காவல்துறை கடும் எச்சரிக்கை

Follow Us