Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Tamil Nadu Temples

Tamil Nadu Temples

இந்தியா பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரம் சார்ந்த மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் பல்வேறு வகையான வழிபாட்டு தலங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றது. இந்து மதத்தை பொறுத்தவரை சைவம், வைணவம் இருவகையாக கோயில்கள் தமிழ்நாட்டில் செயல்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் மற்ற மாநிலங்களை விட இங்கு காவல் தெய்வங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோயிலும் பரிகாரம், கிரகப்பலன் தொடங்கி வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளிலும் தொடர்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் கட்டடக்கலைக்கும், தொல்லியல் ஆராய்ச்சிக்கும் சிறந்த இடமாகவும் கோயில்கள் திகழ்கிறது. உலக மக்களையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு கோயில்கள் தமிழ்நாட்டிலும் உள்ளது. சாதாரண வீதியில் தொடங்கி மிகப்பெரிய கட்டிடங்களுக்குள் வீற்றிருக்கும்,மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்ற தமிழ்நாட்டின் மிக பிரபலமான கோயில்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

 

Read More

பக்தனை தேடி வந்த பெருமாள்.. இந்த காரைக்குடி கோயில் தெரியுமா?

சிவகங்கை அரியக்குடி திருவேங்கடமுடையான் பெருமாள் கோயில் 'தென் திருப்பதி' எனப் போற்றப்படுகிறது. சேவுகன் செட்டியார் கனவில் பெருமாள் தோன்றி, இங்கேயே குடிகொண்டது இதன் வரலாறாக பார்க்கப்படுகிறது. திருமணம், குழந்தை பாக்கியம், கல்வி, வியாபார செழிப்புக்கான வேண்டுதல்கள் இக்கோயிலில் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

பக்தர்களை கண்டு மகிழும் பெருமாள்.. இந்த கோயில் தெரியுமா?

Famous Perumal Temple: திருவாரூர் பாடகாச்சேரியில் அமைந்துள்ள கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோயில், சீதையின் பாடகம் விழுந்த இடமாகும். இக்கோயில் வரலாறு சோழர் காலத்தைச் சார்ந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மனமகிழ்ச்சியுடன் காட்சி தருகிறார். இவரை தரிசித்தால் கடன் தீரும், திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாகும்.

Lakshmi Hyakreevar: பலன்களை அள்ளிக்கொடுக்கும் லட்சுமி ஹயக்ரீவர் கோயில்!

புதுச்சேரி முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோயில், விஷ்ணுவின் ஞான அவதாரமான ஹயக்ரீவரின் சிறப்புகளை விவரிக்கிறது. அசுரர்களிடமிருந்து வேதங்களை மீட்ட ஹயக்ரீவர், மகாலட்சுமியுடன் இங்கு அருள்பாலிக்கிறார். சாளக்கிராமத்தால் ஆன மூலவர் சிலையும், கல்வி, ஞானம், குடும்ப ஒற்றுமை அருளும் இக்கோயில் சிறப்பு வாய்ந்தது.

Vana Thirupathi: திருமண வரம் அருளும் புன்னை நகர் ஸ்ரீனிவாச பெருமாள்!

Punnai Nagar Temple: தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் அருகே அமைந்துள்ளது புன்னை நகர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில். புன்னை மரங்கள் நிறைந்த இடத்தில் உருவான இக்கோயில், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளுடன் பல தெய்வ சன்னதிகளையும் கொண்டுள்ளது. திருமணத் தடைகள் நீங்கவும், நவகிரக தோஷங்கள் விலகவும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

தமிழ்நாட்டில் 2 இடங்களில் தனி கோயில்களில் எழுந்தருளியுள்ள சரஸ்வதி தேவி!

கல்வி மற்றும் ஞானத்தின் அதிபதியான சரஸ்வதி தேவிக்கு நவராத்திரி விழாவின் கடைசி நாளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தமிழகத்தில் அரிதாக இரண்டு இடங்களில் தனிச்சிறப்புமிக்க சரஸ்வதி கோயில்கள் அமைந்துள்ளன. ருவாரூர் மாவட்டம் கூத்தனூர் மற்றும் திருநெல்வேலியில் அமைந்திருக்கும் கோயில்கள் பற்றிக் காணலாம்.

Vanamutti Perumal: சகல பாவங்களையும் நீக்கும் வானமுட்டி பெருமாள் கோயில்!

Kozhikuthi Perumal Temple: மயிலாடுதுறை கோழிகுத்தி வான்முட்டி பெருமாள் கோயில் தனிச்சிறப்பு மிக்கது. அத்தி மரத்தால் ஆன மூலவர் இத்தலத்தின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இவரை தரிசித்தால் திருப்பதி, காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசித்த பலன் கிடைக்கும். சனி தோஷங்கள் நீக்கும் புண்ணிய தலமாகவும் விளங்குகிறது.

காஞ்சிபுரத்தின் ஆளுமை.. இந்த ராஜகோபாலசுவாமி திருக்கோயில் தெரியுமா?

இந்த மணி மங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் பெருமாளுக்குரிய அத்தனை விசேஷ தினங்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வலது கையில் சங்கு ஊதியபடி இவர் காட்சிக் கொடுப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். மேலும் இந்த கோயிலில் இருந்து சற்று தொலைவில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் அமைந்துள்ளார்.

Koodalur: வேண்டிய வரம் அருளும் கூடலூர் அழகிய பெருமாள் கோயில்!

தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கூடல் அழகிய பெருமாள் கோயில், வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அசுரனை வதம் செய்த பின் விஷ்ணு எழுந்தருளிய இடம் இது. சிற்றரசரின் கனவில் தோன்றிய பெருமாள், கோயில் அமைக்க வழி வகுத்தார் என சொல்லப்படுகிறது.

சிவனுக்குரிய வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை.. இந்த பெருமாள் கோயில் தெரியுமா?

Famous Perumal Temple in Tirupur: சோழ மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க மகாவிஷ்ணு காட்சி அளித்ததால் இந்தக் கோயில் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமராவதி ஆற்றங்கரையில் அமைந்த இக்கோயிலில் கல்யாண வரதராஜர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். சைவ வைணவ இணக்கத்தின் அடையாளமாகவும் இக்கோயில் விளங்குகிறது.

பெருமாள் கோயிலில் நந்தி சிலை.. இந்த கோயிலின் சிறப்பு தெரியுமா?

Famous Perumal Temple in Tamilnadu: பழமையான ஓசூர் வெங்கடேஸ்வர சுவாமி கோயிலைப் பொறுத்தவரை, கோட்டகுட்டா கிராமத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிலை, தற்போது மலையில் அமைந்துள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 6 முதல் 11 மணி வரை, மாலை 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

சக்கரத்தாழ்வார் கிடைத்தால் ரொம்ப புண்ணியம்.. இந்த கோயில் தெரியுமா?

கடையநல்லூர் நீலமணிநாதர் கோயில், திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்று காட்சி தரும் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறது. அர்ஜுனனின் பாவ மன்னிப்புடன் தொடர்புடைய வரலாற்றையும், மகாலட்சுமி, ஆண்டாள், விஸ்வக்சேனர் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதிகளையும் கொண்டுள்ளது. இந்தக் கோயிலின் தனித்துவமான தட்சிணாமூர்த்தி சிலையும், இரண்டு ஆஞ்சநேயர்களின் அருள்பாலிப்பும் குறிப்பிடத்தக்கவையாகும்.

Dindigul: திண்டுக்கலை ஆளும் சௌந்தரராஜ பெருமாள்… இந்த கோயில் சிறப்புகள் தெரியுமா?

Famous Perumal temples in Tamilnadu: தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில், மதுரை கள்ளழகர் கோயிலுக்கு இணையான சிறப்பு வாய்ந்தது. துர்வாச முனிவரின் சாபத்தால் தவளையான மண்டூக மகரிஷியின் வேண்டுதலுக்கு இணங்க கள்ளழகர் எழுந்தருளினார். திருமணம், குழந்தைப்பேறு, கல்வி போன்றவற்றிற்காக பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

Dharmapuri: முன் செய்த பாவங்களை போக்கும் தீர்த்தகிரீஸ்வரர் கோயில்!

Tamilnadu Temple Series: தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலின் வரலாறு, ராமரின் சிவபூஜை தொடர்புடைய வரலாறு கொண்டது. ஐந்து வகையான புனித தீர்த்தங்களின் சிறப்புகள், அவற்றின் மருத்துவ குணங்கள் மற்றும் நம்பிக்கைகள் இக்கோயிலின் சிறப்பாகும். மன அமைதிக்கும் உடல் நலத்திற்கும் இக்கோயில் சிறந்ததாக கருதப்படுகிறது.

ஒரே இடத்தில் காசி, ராமேஸ்வரம் சென்ற பலன்.. இந்த கோயில் தெரியுமா?

Rasipuram Kailasanathar Temple: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கைலாசநாதர் கோயில், வல்வில் ஓரியால் கட்டப்பட்டது. கோயிலில் கைலாசநாதர் மற்றும் அறம் வளர்த்த நாயகி அம்மன் காட்சி அளிக்கின்றனர். கோயில் தினமும் காலை 6 முதல் 12 மணி வரையும், மாலை 4:30 முதல் இரவு 8:30 வரையும் திறந்திருக்கும்.

பித்ரு தோஷத்தை போக்கும் சீனிவாச பெருமாள்.. இந்த கோயில் தெரியுமா?

Dindigul Srinivasa Perumal Temple: திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்த சீனிவாச பெருமாள் கோயில், வைணவ சமயத்தின் முக்கியத் தலமாகும். மகாவிஷ்ணுவின் அருளால் உருவான இந்தக் கோயிலில், சீனிவாச பெருமாள், அலமேலு மங்கை, மற்றும் பிற தெய்வங்கள் எழுந்தருளியுள்ளனர். பித்ரு தோஷ நிவர்த்தி, மாங்கல்ய தடை நீக்கம் போன்றவற்றுக்கு இக்கோயில் பிரசித்தி பெற்றது.