AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்..

Thirunallar Sani Peyarchi: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம்பெயர்கிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்..
சிறப்பு ரயில்கள் Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 06 Mar 2026 07:49 AM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில், இன்று 2026 மார்ச் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், புதுச்சேரி அரசு விரிவான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொண்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக 2026 மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே சிறப்பு மெமு (MEMU) ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு கோவில்

புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியம் திருநள்ளாறில் உலக பிரசித்திப் பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனீஸ்வர பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். மேலும் சனீஸ்வர பகவான் கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். தற்போது இன்று 2026 மார்ச் (வெள்ளிக்கிழமை) சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.

லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு

2026 மார்ச் 06 சனிப்பெயர்ச்சி விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் 2026 மார்ச் 6ஆம் தேதி நடைபெற உள்ள சனிப்பெயர்சி விழாவை முன்னிட்டு அங்கு பல்வேறு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகித்தனர் செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து வருகிறது புதுச்சேரி மாநில அரசு.

மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் சிறப்பு ரயில்கள்

அதன்படி 2026 மார்ச் 6, 7 தேதிகளில் விழுப்புரம் – நாகை இடையே சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. காலை 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நண்பகல் 1.05 மணிக்கு நாகை சென்றடையும். மறுமார்க்கமாக பகல் 1.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Also Read: திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா – ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய ஏற்பாடு

தெற்கு ரயில்வே அறிவிப்பு

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே எக்ஸ் தளப்பக்கத்தில், திருநள்ளாரில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவின்போது எதிர்பார்க்கப்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை நிர்வகிக்க விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே 2026 மார்ச் 06 மற்றும் 07 (வெள்ளி & சனிக்கிழமை) முன்பதிவு செய்யப்படாத சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் சேவைகள் புனித நகரத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கு சீரான, வசதியான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. உங்கள் பயணத்தைத் திட்டமிட்டு தெற்கு ரயில்வேயுடன் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us