ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜ் எடுத்துச் செல்கிறீர்களா?.. இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
Online Luggage Booking For Train Travelling | இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள போக்குவரத்து தான் ரயில் போக்குவரத்து. இந்த நிலையில், ரயில் பயணத்தில் கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்வது தொடர்பான ஆன்லைன் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள போக்குவரத்து தான் ரயில் போக்குவரத்து. குறைந்த செலவு, விரைவான பயணம் உள்ளிட்ட அசத்தல் அம்சங்களின் காரணமாக பெரும்பாலான மக்களின் தேர்வாக ரயில் பயணம் உள்ளது. ரயில் பயணம் பொதுமக்கள் வாழ்வில் இத்தகைய முக்கிய பங்கு வகிக்கும் வகையில், பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பயணிகள் தங்களது லக்கேஜ்களை எடுத்துச் செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்யும் அசத்தல் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ள அசத்தல் அம்சம்
முன்பு இருந்த விதிப்படி, பயணிகள் அதிகப்படியான லக்கேஜ் வைத்திருந்தால் அவர்கள் பயணத்திற்கு முன்னதாக ரயில் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், இனி அப்படி இல்லை. அதாவது, உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை வைத்துள்ள பொதுமக்கள் பயணத்தின் போது தங்களுடன் லக்கேஜுகளையும் எடுத்துச் செல்லலாம். அவவாறு லக்கேஜ்களை ரயிலில் எடுத்துச் செல்ல ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யாமல், ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தவெக அரசின் “பர்ஸ்ட் லுக்” பட்ஜெட்.. மக்களுக்கு காத்திருக்கும் மாஸ் சர்ப்ரைஸ் அறிவிப்புகள் என்னென்ன?
ஜூலை 31 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த அம்சம்
இந்த வசதியை இந்திய ரயில்வே ஜூலை 31, 2026 முதல் பயணிகளின் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்துள்ளது. பயணிகளுக்கு சிரமம் இல்லாத அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்துள்ள பயணிகள் தாங்கள் பயணிக்கும் வகுப்புக்கு ஏற்றவாறு லக்கேஜ் எடுத்துச் செல்லலாம். இதனை தாண்டி எடுத்துச் செல்லும் பட்சத்தில் அதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க : EPFO : பணி இழந்துவிட்டால் எவ்வளவு பிஎஃப் பணம் எடுக்கலாம்.. புதிய விதிகள் கூறுவது என்ன?
எவ்வளவு லக்கேஜ் வரை எடுத்துச் செல்லலாம்
முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்தால் 70 கிலோ வரை இலவசமாக லக்கேஜ் எடுத்துச் செல்லலாம். இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்தால் 50 கிலோ வரை இலவசமாக லக்கேஜ் எடுத்துச் செல்லலாம். மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தால் 40 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லலாம். ஏசி சேர் கார் மற்றும் ஸ்லீப்பர் கிளாஸ் போன்றவற்றில் பயணம் செய்தால் 35 கிலோ வரை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.