AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் அதிபர் டிரம்ப்.. “அவர் ஒரு வலிமையான மனிதர்” எனப் புகழாரம்!

President Trump Praises PM Modi: பிரதமர் மோடியை அருகில் நிற்க வைத்துக்கொண்டு, “மோடி ஒரு கடினமான மனிதர்” (Modi is a tough man) என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் மோடியைப் பாராட்டிய டிரம்ப், தற்போது மீண்டும் இவ்வாறு பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் அதிபர் டிரம்ப்.. “அவர் ஒரு வலிமையான மனிதர்” எனப் புகழாரம்!
பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் அதிபர் டிரம்ப்..
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Nov 2026 16:43 PM IST

நவம்பர் 17, 2026: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற குவாட் (QUAD) தலைவர்கள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பாராட்டிப் பேசியுள்ளார். பிரதமர் மோடியை அருகில் நிற்க வைத்துக்கொண்டு, “மோடி ஒரு கடினமான மனிதர்” (Modi is a tough man) என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் மோடியைப் பாராட்டிய டிரம்ப், தற்போது மீண்டும் இவ்வாறு பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க: பிலிப்பைன்ஸ் பாரம்பரிய உடையில் அசத்திய பிரதமர் மோடி.. ராமாயண நாட்டிய நிகழ்ச்சி முதல் பாரம்பரிய விருந்து வரை…

மணிலாவில் குவாட் தலைவர்கள் மாநாடு

ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திங்கள்கிழமை மணிலா சென்றடைந்தார். இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 7-வது குவாட் தலைவர்கள் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி ஆகியோருடன் மோடி பங்கேற்றார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து செயல்படும் குவாட் அமைப்பின் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு நடைபெறுகிறது.

மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, முக்கிய கனிம வளங்கள், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை மாநாட்டின் முக்கிய விவாதப் பொருட்களாக உள்ளன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் படிக்க: அக்டோபரில் 26 டன் கொள்முதல்! சீனா அதிகளவு தங்கத்தை வாங்கி இருப்பு வைப்பது ஏன்? இந்தியா எந்த இடத்தில் உள்ளது!

குவாட் அமைப்பு எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிற்கும் எதிரானது அல்ல என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மாநாட்டுக்குப் பிறகு சீனா செல்லும் டிரம்ப், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளார்.

இந்தியா – பிலிப்பைன்ஸ் உறவில் முக்கியத்துவம்

இந்தப் பயணத்தின்போது பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் இணைப்புத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.  குறிப்பாக, இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய பிரம்மோஸ் ஏவுகணைகள் இரு நாடுகளின் பாதுகாப்பு உறவில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளன.

குவாட் மாநாட்டில் பிரதமர் மோடிக்கு தனிச்சிறப்பு

2021ஆம் ஆண்டு தலைவர்கள் அளவிலான மாநாடாக குவாட் அமைப்பு உயர்த்தப்பட்டது. அப்போது முதல் நடைபெற்ற அனைத்து மாநாடுகளிலும் பங்கேற்ற ஒரே தலைவர் என்ற பெருமையைப் பிரதமர் மோடி பெற்றுள்ளார். மணிலா மாநாடு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நான்கு நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us