மாலையிடும் ஐயப்ப பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது?
Ayyappa Mala Vratham: ஐயப்ப மாலை அணியும் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து, தினமும் அதிகாலையில் நீராடி ஐயப்பனை வழிபட வேண்டும். விரத காலத்தில் அசைவ உணவு, மது, புகையிலை போன்றவற்றைத் தவிர்த்து, பிரம்மச்சரியம் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். கோபம், பொய் பேசுதல், பிறரைப் புண்படுத்துதல் போன்ற செயல்களைத் தவிர்த்து, மனத்தூய்மை, பொறுமை, பக்தியுடன் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
கார்த்திகை மாதம் தொடங்கியதும் சபரிமலைக்குச் (Sabarimalai) சென்று ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் மண்டல விரதத்தைத் தொடங்குவது வழக்கம். மாலை அணிவது என்பது வெறும் ஆன்மிக அடையாளம் மட்டுமல்ல. உடல், மனம் மற்றும் செயல்களில் தூய்மையையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பதற்கான ஒரு விரத முறையாகும். தினமும் கோவிலுக்குச் சென்று வழிபடுதல், ஐயப்ப பஜனைகளில் கலந்துகொள்ளுதல், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல் போன்ற நற்செயல்களில் ஈடுபடலாம். ஆடம்பரங்களைத் தவிர்த்து எளிமையாக வாழ்வதுடன், மன அமைதி, பொறுமை, அன்பு மற்றும் பிறருக்கு உதவும் பண்புகளை வளர்த்துக் கொள்வதே ஐயப்ப விரதத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த விரத காலத்தில் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.
Also Read: குடும்பத்தில் சர்க்கரை நோய் இருந்தால் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுமா?
குருசாமி மூலம் மாலை அணிவது சிறப்பு
ஐயப்ப பக்தர்கள் துளசி மணி அல்லது ருத்ராட்ச மாலையை குருசாமி அல்லது கோவில் அர்ச்சகர் மூலம் அணிந்து கொள்வது வழக்கம். மாலை அணிந்த நாள் முதல் விரதம் தொடங்குகிறது. பொதுவாக சபரிமலை யாத்திரைக்குச் செல்வதற்கு முன்பாக 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். இந்த நாட்களில் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து, மாலையிலும் நீராடி ஐயப்பனை வழிபட வேண்டும். காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றி சரண கோஷம் சொல்லி வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
உணவு முறைகளில் கவனம் தேவை
விரதம் இருக்கும் பக்தர்கள் சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். சாதம், இட்லி, தோசை, காய்கறிகள், கீரைகள், பழங்கள், பால் போன்ற எளிய உணவுகளைச் சாப்பிடலாம். அசைவ உணவுகள், மீன், முட்டை, மது மற்றும் புகையிலைப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். சில விரத மரபுகளின்படி வெங்காயம், பூண்டு போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இயன்றவரை வீட்டில் தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகளை உட்கொள்வது நல்லது.
தவிர்க்க வேண்டிய செயல்கள்
மாலை அணிந்த பக்தர்கள் விரத காலம் முடியும் வரை மது அருந்துதல், புகைப்பிடித்தல், அசைவ உணவு சாப்பிடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதுடன், கோபம், பொய் பேசுதல், பிறரைப் புண்படுத்துதல், தேவையற்ற வாக்குவாதம் போன்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது. முடி வெட்டுதல், சவரம் செய்தல், நகங்களை வெட்டுதல் போன்றவற்றையும் விரத மரபுகளின்படி தவிர்க்க வேண்டும். எளிமையான ஆடைகளை அணிந்து, இயன்றவரை காலணிகளைத் தவிர்த்து வாழ வேண்டும்.
Also Read: குடும்பத்தில் சர்க்கரை நோய் இருந்தால் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுமா?
மனத்தூய்மையும் இறை சிந்தனையும் அவசியம்
விரத காலத்தில் ஐயப்ப பக்தர்கள் கருப்பு, நீலம் அல்லது காவி நிற ஆடைகளை அணிவது வழக்கம். பிற பெண்களைத் தாய் அல்லது சகோதரியாகவும், ஆண்களைச் சுவாமி என்றும் மரியாதையுடன் அழைக்க வேண்டும். தினமும் கோவிலுக்குச் சென்று வழிபடுதல், ஐயப்ப பஜனைகளில் கலந்துகொள்ளுதல், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல் போன்ற நற்செயல்களில் ஈடுபடலாம். ஆடம்பரங்களைத் தவிர்த்து எளிமையாக வாழ்வதுடன், மன அமைதி, பொறுமை, அன்பு மற்றும் பிறருக்கு உதவும் பண்புகளை வளர்த்துக் கொள்வதே ஐயப்ப விரதத்தின் முக்கிய நோக்கமாகும்.