Sai Pallavi: ஓ.எம் படத்தில் ஆந்திர பெண்ணாக நடித்திருக்கிறேன் – சாய் பல்லவி பகிர்ந்த விஷயம்!
Sai Pallavi About Her Nithya Reddy Role In OM: தென்னிந்திய சினிமாவில் கலக்கி, தற்போது பான் இந்திய கதாநாயகியாக பிரம்மாண்ட உருவெடுத்திருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் ராமாயணா படத்தில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளார். மேலும் தனுஷின் ஓ.எம் படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவரின் வேடம் இப்படத்தில் எப்படி இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் இயற்கை அழகை கொண்ட நடிகைதான் சாய் பல்லவி (Sai Pallavi). இவரின் நடிப்பில் இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பான் இந்திய மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்த இவர், தென்னிந்திய மொழிகளை கடந்து பான் இந்திய நாயகியாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் ஓ.எம் (O.M Movie). இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Director Rajkumar Periasamy) இயக்கியுள்ள நிலையில், தனுஷ் (Dhanush) ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார்.
இதில் வனத்துறை போலீஸ் அதிகாரியாக இவர் நடித்திருக்கும் நிலையில், இவரின் கதாபாத்திரத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்துவருகிறது. அந்த விதத்தில் இவரின் கதாபாத்திரம் குறித்து, சமீபத்தில் ஹெளுக்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சாய் பல்லவி பேசியுள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: டிக்கெட் டூ ஃபினாலே பில்டப் வீக்.. ஆப்ரேஷன் ரெஸ்கியூ டாஸ்கில் அதிரடியாக பிக் பாஸ் வீடு!
ஓ.எம் திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து வெளிப்படையாக பேசிய சாய் பல்லவி:
தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி, அதில் “ஓ.எம் படத்தின் டிரெய்லரில் நீங்கள் பார்த்ததெல்லாம், இப்படம் வழங்கவிருக்கும் மிகப் பெரிய கதையின் ஒரு சிறு பகுதி மட்டுமே. இப்படத்திற்கு அலை விளைவு என்று ஒன்று உண்டு. ஓர் இடத்தில் நடக்கும் ஒரு நிகழ்வு, வேறொரு இடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதையும் படிங்க: அல்லகலோவா அஸ்ஸி பாவா… மேடையில் ஒன்றாக இணைந்து நடனமாடிய டான்ஸிங் குயின்ஸ் சாய் பல்லவி – ஸ்ரீலீலா!
நாங்கள் எல்லாருமே வெவ்வேறு வேடங்களில் நடித்திருக்கிறோம், இறுதியில் எங்கள் கதைகள் அனைத்தும் ஒன்றிணைந்து மிகப் பெரிய ஒன்றை உருவாக்குகின்றன. இதில் நான் ஒரு ஆந்திரப் பெண்ணாக நடிக்கிறேன், நீங்கள் இந்தப் படத்தை தமிழில் பார்த்தால், அதில் நான் தெலுங்கு பேசுவதை கேட்கலாம்” என அதில் அவர் பேசியுள்ளார்.
ஓ.எம் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நடிகை சாய் பல்லவி பேசிய வீடியோ பதிவு:
#Saipallavi about #OM
– Whatever you’ve seen in the trailer is just a glimpse of the much bigger story the film has to offer. There’s something called the ripple effect, where an event happening in one place can have an impact somewhere else.
– We all play different characters, and eventually, all our stories come together to create something much bigger. I play an Andhra girl, and if you watch the film in Tamil, you’ll hear me speaking Telugu in it. https://t.co/lAiRAsuomZ
— Movie Tamil (@_MovieTamil) November 16, 2026
நடிகை சாய் பல்லவியின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் 3வது வெளியாக காத்திருக்கும் படம்தான் ஓ.எம். இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி, நித்யா ரெட்டி என்ற ஐபிஎஸ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுவரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் இவர், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள முதல் படம் இந்த ஓ.எம் திரைப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது 2026 நவம்பர் 20ம் தேதியில் பான் இந்திய மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.