AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அல்லகலோவா அஸ்ஸி பாவா… மேடையில் ஒன்றாக இணைந்து நடனமாடிய டான்ஸிங் குயின்ஸ் சாய் பல்லவி – ஸ்ரீலீலா!

Sai Pallavi and Sreeleela Aancing Video: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் சிறந்த நடிகையாக கொண்டாடப்பட்டுவருபவர் நடிகை சாய் பல்லவி. இவரின் நடிப்பில் தமிழில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் ஓ.எம். இந்த படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

அல்லகலோவா அஸ்ஸி பாவா… மேடையில் ஒன்றாக இணைந்து நடனமாடிய டான்ஸிங் குயின்ஸ் சாய் பல்லவி – ஸ்ரீலீலா!
சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 17 Nov 2026 11:06 AM IST

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக இருந்து, தற்போது பான் இந்திய கதாநாயகியாக உருவெடுத்திருப்பவர் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் குறைவான படங்கள் வெளியாகியிருந்தாலும், சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் ராமாயணா பார்ட் 1 (Ramayana Part 1). இப்படம் இவர் இந்தியில் நடித்துள்ள 2வது படமாகும். இந்த படமானது வெளியாகி சுமார் ரூ 1100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துவருகிறது. இந்த படத்திற்கு பின் தமிழில் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் ஓ.எம் (O.M Movie). இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Director Rajkumar Periasamy) இயக்கத்தில், உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷ் (Dhanush) நாயகனாக நடித்துள்ளார்.

அவருடன் மிகவும் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகை சாய் பல்லவி இதில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியானது நடைபெற்றிருந்தது. அதில் மேடையில் ஒன்றாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடனமாடிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இந்தக் கனவுக்கு வானமே எல்லை அல்ல… வெளியானது துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஓகா தாரா படத்தின் ட்ரெய்லர்!

ஓ.எம் பட பாடலுக்கு மேடையில் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடனமாடிய வீடியோ பதிவு:

நடிகை சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இருவருமே மேடையில், அல்லகலோவா பாடலுக்கு இணைந்தது நடனமாடியுள்ளனர். சாய் பல்லவி சிறந்த டான்ஸர் என்ற நிலையில், அதே போல நடிகை ஸ்ரீலீலாவும் சிறந்த டான்ஸர்தான். அந்த விதத்தில் இந்த இரு டான்ஸிங் குயீன்ஸ் ஓ.எம் படத்தில் இணைந்து நடித்துள்ள நிலையில், இப்படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து நடனமாடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. ஆனால் இவர்கள் இருவரும் நடனமாடுவதுபோல என்ற பாடல்களும் ஓ.எம் படத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ.எம் திரைப்பட சென்சார் அப்டேட்:

இந்த ஓ.எம் திரைப்படமானது மக்கள் மத்தியில் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படத்தில் தனுஷ் ஒரு போலீஸ் உளவாளியாக நடித்துள்ளார். மேலும் நடிகை சாய் பல்லவி, ஆந்திர வனத்துறை போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க: டிடிஃஎப் வாசன்-ஐ வேண்டுமென்றே வம்புக்கு இழுத்த முனியம்மாள் – கோபத்தில் கொதித்தெழுந்த டிடிஃஎப் வாசன்!

இந்த படமானது பான் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. அந்த விதத்தில் இப்படத்திற்கு யு/ஏ 16+ சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக 16 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே இந்த படத்தை திரையரங்குகள் சென்று பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us