AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: அதிகாலை நேரத்தில் இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி.. அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!

India vs New Zealand Test Series Timings: இந்தியா-நியூசிலாந்து இடையேயான 2026 டெஸ்ட் தொடர் நவம்பர் 19 அன்று நியூசிலாந்தில் தொடங்குகிறது. இந்திய ரசிகர்களுக்கு இது அதிகாலை 3:30 மணி என்பதால் நேரம் பெரும் பிரச்சனையாகும். T20, ஒருநாள் போட்டிகள் இந்திய நேரப்படி வசதியாக இருந்தபோதும், டெஸ்ட் போட்டிகள் இந்தியர்களுக்கு சவால். வெலிங்டன், கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறும் இப்போட்டிகளின் முழு அட்டவணை, அமர்வு நேரம் மற்றும் இரு அணி வீரர்களின் பட்டியல் இங்கே.

IND vs NZ: அதிகாலை நேரத்தில் இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி.. அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!
நியூசிலாந்து டெஸ்ட் தொடர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Nov 2026 10:30 AM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2026 நவம்பர் 19ம் தேதி தொடங்குகிறது. நியூசிலாந்தில் போட்டிகள் நடைபெறும் போதெல்லாம், இந்திய ரசிகர்களுக்கு நேரம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். இந்திய (Indian Cricket Team) ரசிகர்கள் எப்போதும் போட்டிகளின் நேரத்தை உன்னிப்பாகக் கவனிப்பார்கள். இருப்பினும், நியூசிலாந்தில் நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களின் நேரம், இந்திய நேரத்தைக் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டது. டி20 போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கும், ஒருநாள் போட்டிகள் காலை 7:30 மணிக்கும் தொடங்கின. ஆனால், டெஸ்ட் போட்டிகளின் நேரம் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இந்திய நேரப்படி அதிகாலை 3:30 மணிக்குத் தொடங்கும். அதன்படி, டாஸ் அதிகாலை 3 மணிக்கு போடப்பட்டு, முதல் பந்தானது 3:30 மணிக்கு வீசப்படும்.

ALSO READ: 13 ஆண்டுகளுக்குப் பிறகு.. இரட்டை இலக்க ரன்கள் எடுக்க முடியாமல் திணறும் கோலி!

முதல் டெஸ்ட் போட்டி எப்போது தொடக்கம்..?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் 2026 நவம்பர் 19 முதல் 23 வரை நடைபெறும். இரண்டாவது டெஸ்ட் போட்டி, கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் ஸ்டேடியத்தில் 2026 நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறும்.

இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் போட்டி நேரங்கள்

  • முதல் அமர்வு – காலை 3:30 மணி முதல் 5:30 மணி வரை
  • மதிய உணவு இடைவேளை – காலை 5:30 மணி முதல் 6:10 மணி வரை
  • இரண்டாம் அமர்வு – காலை 6:10 மணி முதல் 8:10 மணி வரை
  • டீ இடைவேளை – காலை 8:10 மணி முதல் 8:30 மணி வரை
  • மூன்றாம் அமர்வு – காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை

ALSO READ: நியூசிலாந்து தொடரில் சொதப்பல்.. 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் இடம் கேள்வி!

இந்திய டெஸ்ட் அணி:

சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா , பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குர்னூர் பிரார், முகமது சிராஜ்.

நியூசிலாந்தின் டெஸ்ட் அணி:

டாம் லேதம் (கேப்டன்), டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், நாதன் ஸ்மித், பிளேயர் டிக்னர் மற்றும் வில் யங்.

Follow Us