IPL 2027: மீண்டும் இடம் மாறும் முகமது ஷமி.. லக்னோ அணியில் தமிழக வீரரும் வெளியேற்றமா?
Mohammed Shami IPL trade:முகமது ஷமி ஐபிஎல் 2027 சீசனுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிலிருந்து பரிமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்குப் பதிலாக இங்கிலாந்தின் சாம் கர்ரன் லக்னோ அணியில் இணைவார். மேலும், மணிமாறன் சித்தார்த்தையும் லக்னோ விடுவிக்கிறது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கடந்த ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். 2025 சீசனில் ஷமி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 10 கோடிக்கு வாங்கியது. ஹைதராபாத் அணிக்காக ஒரு சீசன் விளையாடிய பிறகு, 2026ல் முகமது ஷமி (Mohammed Shami) லக்னோ அணிக்கு மாற்றப்பட்டார். தற்போது, வரவிருக்கும் ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக, ஷமியின் பரிமாற்றம் குறித்த செய்தி மீண்டும் சூடுபிடித்துள்ளது.
கிரிக்கின்ஃபோ அறிக்கையின்படி, முகமது ஷமி லக்னோ அணியிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்யப்படவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான சாம் கர்ரன் பரிமாற்றம் செய்யப்படுவார். இதன் மூலம் சாம் கர்ரன் லக்னோ அணியில் இணைவார். இந்த விவகாரம் முகமது ஷமியுடன் முடிந்துவிடவில்லை. இந்தப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் மணிமாறன் சித்தார்த்தையும் விடுவிக்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒப்புக்கொண்டுள்ளது.




ALSO READ: ராஜஸ்தான் போட்ட புது கணக்கு.. ஹர்திக் பாண்ட்யாவுக்கு படையெடுக்கும் அணிகள்!
ஐபிஎல் 2026ல் ஷமியின் செயல்திறன் எப்படி..?
🚨 Mohammad Shami to Rajasthan Royals:
LSG are set to trade Mohammad Shami to Rajasthan Royals, while RR are set to trade Sam Curran to Lucknow Super Giants.
So, all those rumours about Yashasvi Jaiswal moving to LSG were just rumours. https://t.co/aE66Qwt0Ny
— Indian Cricket Ministry (@Tejashyyyyyy) November 16, 2026
முகமது ஷமி கடந்த ஐபிஎல் 2026 சீசனில் தனது திறமைக்கு ஏற்ப முழுமையாகச் செயல்படவில்லை. அதாவது, ஷமி லக்னோ அணிக்காக 13 போட்டிகளில் விளையாடி , 38.25 சராசரி மற்றும் 9 எகானமி ரேட்டுடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரசிகர்கள் அவரிடமிருந்து எப்போதும் சிறப்பான பந்துவீச்சை எதிர்பார்க்கிறார்கள். உதாரணமாக, 2023-ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியபோது, ஷமி 18.64 என்ற சிறப்பான சராசரியில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப்பை வென்றார். இதுவே ஒரு சீசனில் ஷமி எடுத்த அதிகபட்ச விக்கெட் எண்ணிக்கையாகும். இந்த பரிமாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: அணிகளுக்கு காலக்கெடு எதுவரை..? பிசிசிஐ எப்போது தக்கவைக்கப்பட்ட வீரர்களை அறிவிக்கும்?
முகமது ஷமியின் ஐபிஎல் வாழ்க்கை
2013-ல் ஐபிஎல்-லில் அறிமுகமான முகமது ஷமி, இதுவரை தனது ஐபிஎல் வாழ்க்கையில் 132 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த 132 இன்னிங்ஸ்களில் பந்துவீசி, அவர் 29.02 சராசரியில் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மேலும் ஒரு போட்டியில் 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்பது இவரது சிறந்த பந்துவீச்சுப் புள்ளிவிவரமாகும். மேலும், ஷமி 8.67 என்ற எகானமி ரேட்டில் ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். பேட்டிங்கில், ஷமி 36 இன்னிங்ஸ்களில் 115 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 21 ஆகும்.