AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ICC Cricket Schedule 2035: 2031 உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா.. எதிர்கால அட்டவணையை வெளியிட்ட ஐசிசி!

ICC Future Events: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2035 ஆம் ஆண்டு வரையிலான ஆண்கள் கிரிக்கெட் போட்டி அட்டவணையை வெளியிட்டது. இதில், 2029 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2031 ஒருநாள் உலகக் கோப்பை ஆகிய முக்கியப் போட்டிகளை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றது. 2031 உலகக் கோப்பையை இந்தியா வங்கதேசத்துடன் இணைந்து நடத்தும்.

ICC Cricket Schedule 2035: 2031 உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா.. எதிர்கால அட்டவணையை வெளியிட்ட ஐசிசி!
ஒருநாள் உலகக் கோப்பை
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Nov 2026 22:27 PM IST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), 2035ம் ஆண்டு வரை அனைத்து ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளையும் நடத்துவதற்கான கால அட்டவணைக்கு இன்று அதாவது 2026 நவம்பர் 15ம் தேதி ஒப்புதல் அளித்தது. மேலும், 2031 ஆம் ஆண்டு வரையிலான ஆண்கள் ஐசிசி போட்டிகளை நடத்தும் நாடுகளையும் ஐசிசி அறிவித்தது. இதில், 2 முக்கியப் போட்டிகளை நடத்தும் உரிமை இந்தியாவிற்கு (India) வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2029 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2031 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் உரிமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ஆஸ்திரேலிய ஆலோசகராக மைக்கெல் ஹஸ்ஸி.. 2027 உலகக் கோப்பைக்காக முக்கிய பொறுப்பு!

இந்தியா, 2029 அக்டோபர் 9 முதல் 28 வரை சாம்பியன்ஸ் டிராபியையும், 2031 அக்டோபர் 9 முதல் நவம்பர் 23 வரை 2031 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியையும் இணைந்து நடத்தும். 2031-க்குப் பிறகான போட்டிகளை நடத்தும் நாடுகளை ஐசிசி இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், அவற்றின் தேதிகள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவும் வங்கதேசமும் 2031 ஒருநாள் உலகக் கோப்பையை நடத்தவுள்ளன. இந்த மாபெரும் நிகழ்வை இணைந்து நடத்தும் உரிமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா 2029-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் நடத்தவுள்ளது. இதைத் தொடர்ந்து, 2035 ஒருநாள் உலகக் கோப்பையும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய போட்டியானது 2035ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும். இருப்பினும், போட்டியை நடத்தும் நாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வேறு எந்தெந்த நாடுகள் எந்த போட்டிகளை நடத்தவுள்ளது..?


2028-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 2028 அக்டோபர் 12 முதல் நவம்பர் 12 வரை நடைபெறும். இதன் அடுத்த பதிப்பு 2030-ல் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியால் நடத்தப்படும். அதைத் தொடர்ந்த டி20 உலகக் கோப்பைகள் 2032 மற்றும் 2034-ல் நடைபெறும். இந்த இரண்டு போட்டிகளுக்கான நடத்தும் நாடுகள் மற்றும் இடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி 2035 வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூன் மாதத்தில் நடைபெறும். 2029 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து இறுதிப் போட்டிகளை நடத்தும். 2033 மற்றும் 2035 ஆம் ஆண்டுகளுக்கான இறுதிப் போட்டிகளை நடத்தும் நாடுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ALSO READ: பிரபோர்னிலிருந்து வான்கடேக்கு மாறிய போட்டிகள்.. WPL 2027ல் திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?

ஐசிசி விளக்கம்:

ஐசிசி தலைமை நிர்வாகி சஞ்சோக் குப்தா கூறுகையில், “ஐசிசியின் போட்டிகள் மற்றும் திட்டங்களின் தொகுப்பு, உலகளாவிய கிரிக்கெட் உள்கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். அவை விளையாட்டை மேலும் போட்டித்தன்மை மிக்கதாக மாற்றுவதோடு, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் ஒரு சிறந்த வழிகாட்டுதலையும் சூழலையும் வழங்குகின்றன. இந்தத் தொடர்களைப் பற்றி வீரர்களுக்கும் உறுப்பு நாடுகளுக்கும் முழுமையான தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். இது வீரர் மேம்பாட்டிற்கான சிறந்த திட்டங்கள், உயர் செயல்திறன் திட்டங்கள் மற்றும் ஒரு முறையான கிரிக்கெட் கால அட்டவணை ஆகியவற்றை உருவாக்க உதவும்” என்று கூறினார்.

Follow Us