2027 ODI World Cup: ஆஸ்திரேலிய ஆலோசகராக மைக்கெல் ஹஸ்ஸி.. 2027 உலகக் கோப்பைக்காக முக்கிய பொறுப்பு!
Michael Hussey Joins Cricket Australia: மைக்கேல் ஹஸ்ஸி சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து விலகி, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 2027 ஒருநாள் உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர், டி20 உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியை உருவாக்குவதில் அவர் நிர்வாகத்திற்கு உதவுவார். இங்கிலாந்து டி20 மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் அவரது முதல் முக்கிய சவால்களாக இருக்கும்.
சில நாட்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து (Chennai Super Kings) விலகிய மைக்கேல் ஹஸ்ஸி, ஆஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளார். 2026 நவம்பர் 6ம் தேதி 2027 ஆஷஸ் தொடர் மற்றும் 2027ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான ஆலோசகராக மைக்கேல் ஹஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. இந்தப் பொறுப்பில், 2027 உலகக் கோப்பைக்காக (2027 ODI World Cup) ஒரு வலுவான அணியை உருவாக்குவதில் நிர்வாகத்திற்கு உதவுவது ஹஸ்ஸியின் பொறுமையாக இருக்கும்.
ALSO READ: தலா 2 வீரர்கள் பரிமாற்றம்.. சிஎஸ்கே – எஸ்ஆர்ஹெச் ரகசிய அதிரடி ஒப்பந்தம்..!




ஹஸ்ஸியின் பங்கு இதோடு நின்றுவிடவில்லை. மேலும், ஆஸ்திரேலிய அணி டி20 அணியின் ஆலோசகராகவும் இருப்பார். மேலும், 2028ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை மற்றும் 2028ம் ஆண்டு நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணிக்கும் மைக்கேல் ஹஸ்ஸி ஆலோசகராக இருப்பார். தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் சிஎஸ்கே-விலிருந்து விலகியதிலிருந்து, அணியின் பயிற்சி ஊழியர்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மைக்கேல் ஹஸ்ஸி, ஐபிஎல் 2026 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகத் தொடர்ந்தார்.
மைக்கேல் ஹஸ்ஸிக்கு இருக்கும் சவால்:
Mike Hussey will return to Australian ranks as the national men’s side strengthens their coaching team ahead of a bumper two years.
MORE: https://t.co/9k8b33s9Me https://t.co/1PGugXme7Q
— cricket.com.au (@cricketcomau) November 6, 2026
2026 நவம்பர் 21ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்தான் அவரது முதல் பெரிய சவாலாக இருக்கும். அதன்பிறகு, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாராவதற்கு ஆஸ்திரேலிய அணிக்கு ஹஸ்ஸி உதவுவார். ஸ்டீபன் ஃபிளெமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகி இங்கிலாந்தின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபோது, மைக்கேல் ஹஸ்ஸியும் அவருடன் பயிற்சி ஊழியர்களில் இணையக்கூடும் என்ற யூகங்கள் எழுந்தன. இருப்பினும், மைக்கேல் ஹஸ்ஸிக்கு இப்போது அவரது சொந்த ஆஸ்திரேலிய அணிக்கான ஒரு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ALSO READ: 2027 உலகக் கோப்பையில் விளையாடவே விருப்பம்.. மனம் உருகி பேசிய ரோஹித் சர்மா!
2027ம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி ஒருநாள் உலகக் கோப்பை தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பாக, ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆஷஸ் தொடர் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும். அதற்கு முன்பாக, ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும். எனவே, மைக்கேல் ஹஸ்ஸியும் ஆஸ்திரேலியப் பயிற்சி ஊழியர்களும் பல குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
இதுகுறித்து மைக்கேல் ஹஸ்ஸி கூறுகையில், “தனது புதிய பொறுப்பில் ஆஸ்திரேலிய அணியுடன் பணியாற்றுவதில் உற்சாகமாக இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.