AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பள்ளி வேனில் காத்திருந்த சிறுமி.. கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை.. திருவள்ளூரில் வக்கிர புத்தியுடைய வேன் ஓட்டுநர் கைது!

Thiruvallur Van Driver Arrested : திருவள்ளூரில் பள்ளி வளாகத்தில் வைத்து 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வேன் ஓட்டுநரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வேனில் காத்திருந்த சிறுமி.. கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை.. திருவள்ளூரில் வக்கிர புத்தியுடைய வேன் ஓட்டுநர் கைது!
கைது செய்யப்பட்ட வேன் ஓட்டுநர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 06 Nov 2026 19:07 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி வேன் ஓட்டுனரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை புழல் பகுதியில் வசித்து வருபவர் ஷியாம் ( 31 வயது). இவர், திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் பள்ளி வகுப்புகள் முடிந்த நிலையில் யுகேஜி பயிலும் 5 வயது சிறுமி ஒருவர் பள்ளி வேனில் சக மாணவ, மாணவிகளுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது, சிறுமி தனியாக இருப்பதை பார்த்த அந்த வேன் ஓட்டுநர் ஷியாம் அவரை ஆசை வார்த்தை கூறி பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு அழைத்து சென்றார்.

பள்ளி கழிவறையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

அங்கு வைத்து அந்த சிறுமிக்கு ஓட்டுனர் ஷியாம் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியிடம் இந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது, அதையும் மீறி தெரிவித்தால் உனது பெற்றோரை கொலை செய்து விடுவேன் என்று பள்ளி வேன் ஓட்டுநர் ஷியாம் மிரட்டி உள்ளார். இதனால், அச்சம் அடைந்த அந்த சிறுமி வீட்டிற்கு சென்ற போதும் இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

மேலும் படிக்க: தென்காசியில் எரிந்த நிலையில் பெண் சடலம்.. நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி… போலீசார் விசாரணை!

சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம்

ஆனால், வழக்கம் போல ஓடி ஆடி விளையாடும் சிறுமியின் நடவடிக்கையில் சற்று மாற்றம் தெரிந்த நிலையில் இது தொடர்பாக பெற்றோர்கள் விசாரித்துள்ளனர். இதில், அந்த சிறுமி தனக்கு நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் வேன் ஓட்டுநர் கைது

இதில், வேன் ஓட்டுனர் ஷியாம் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, தலைமறைவாக இருந்து வந்த ஷியாமை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அத்துடன், இவரால் பள்ளியில் பயிலும் வேறு சிறுமிகள் யாரேனும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் 5 வயது சிறுமிக்கு வேன் ஓட்டுநர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: அரசு அலுவலக வங்கி கணக்கில் கை வைத்த ஹேக்கர்ஸ்.. ரூ. 11 லஞ்சம் கொள்ளை.. நாகை சைபர் கிரைம் போலீஸ் விசாரணை!

Follow Us