AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மாடலிங் ஆசை காட்டி ரூ. 20 லட்சம் மோசடி – இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை – கோவையில் பகீர் சம்பவம்

Coimbatore Modeling Trainer Arrested : கோவையில் தேசிய அளவில் மாடலிங் பயிற்சி (Modeling) தருவதாகக் கூறி ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ. 20 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததுடன், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பிரபல மாடலிங் பயிற்றுநரைச் சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாடலிங் ஆசை காட்டி ரூ. 20 லட்சம் மோசடி – இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை – கோவையில் பகீர் சம்பவம்
மாதிரி புகைப்படம்
Sekaran S
Sekaran S | Updated On: 06 Nov 2026 19:15 PM IST

​கோயம்புத்தூர், நவம்பர் 6 : கோவையில் தேசிய அளவில் மாடலிங் பயிற்சி (Modeling) தருவதாகக் கூறி ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ. 20 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததுடன், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பிரபல மாடலிங் பயிற்றுநரைச் சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை, சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஜான் அமலன் (வயது 32). இவர் தேசிய அளவில் மாடலிங் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

மாடலிங் ஆசை காட்டி ரூ. 20 லட்சம் மோசடி

​இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தங்கு விடுதியில் தங்கி இருந்து, அப்பகுதியில் உள்ள முன்னணி ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த அந்த பெண், கடந்த 6 மாத காலமாக ஜான் அமலனிடம் மாடலிங் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இதையும் படிக்க : திமுகவினர் திராவிடம் பேசுவதே கொள்ள அடிக்கதான்.. ஊழல்வாதிகளை கூண்டோடு கைது செய்க.. மெயின் பாயிண்டில் கை வைத்த மாணிக்கம்!

பயிற்சியின் போது, அந்த இளம் பெண்ணை தேசிய அளவிலான பெரிய மாடலிங் போட்டிகள் மற்றும் விளம்பரங்களில் பங்கேற்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறிய ஜான் அமலன், அதற்காகப் பல்வேறு கட்டங்களாகச் சுமார் ரூ. 20 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகும் கூறியபடி வாய்ப்புகளைப் பெற்றுத் தராமல் ஏமாற்றி வந்த ஜான் அமலன், ஒருகட்டத்தில் அந்த இளம் பெண்ணிற்குத் தொடர்ச்சியாகக் கடுமையான பாலியல் தொந்தரவுகளையும் கொடுத்து வந்து உள்ளார்.
​
மாடலிங் பயிற்றுநரின் இந்த அத்துமீறலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட 22 வயது ஐ.டி பெண் ஊழியர், இதுகுறித்துச் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம் பெண்ணிடம் பண மோசடி செய்தது மற்றும் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சிங்காநல்லூர் டி.வி.ஹச் வஸ்தா குடியிருப்பில் இருந்த ஜான் அமலனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

​பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாடலிங் ஆசை காட்டி பெண் ஊழியரிடம் ரூ. 20 லட்சம் சுருட்டி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க : அரசு அலுவலக வங்கி கணக்கில் கை வைத்த ஹேக்கர்ஸ்.. ரூ. 11 லஞ்சம் கொள்ளை.. நாகை சைபர் கிரைம் போலீஸ் விசாரணை!

கடந்த 2025 ஆம் ஆண்டு கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உள்ளாக்கியது. கோவை விமான நிலையம் அருகே நண்பருடன் தனியாக பேசிக்கொண்டிருந்த பெண்ணுக்கு இந்த கொடுமை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us