IND vs NZ: இந்தியா – நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி.. எப்போது, எங்கு காணலாம்..?
IND vs NZ 2nd ODI Match Preview: இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி நவம்பர் 7, 2026 அன்று வெலிங்டனில் நடைபெறுகிறது. தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ள இந்தியா, தனது வெற்றியை மேலும் உறுதிப்படுத்த முயற்சிக்கும். நியூசிலாந்து தொடரை சமன் செய்ய ஆவலுடன் உள்ளது.
இந்தியா – நியூசிலாந்து இடையிலான (IND vs NZ) 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்திய அணிக்கு (Indian Cricket Team) சுப்மன் கில்லும், நியூசிலாந்து அணிக்கு மிட்செல் சாண்ட்னரும் தலைமை தாங்குகின்றனர். நாளை அதாவது 2026 நவம்பர் 7ம் தேதி நடைபெறும் 2வது போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளன. இதில் இந்தியா தனது முன்னிலையை மேலும் வலுப்படுத்த முயற்சிக்கும். இதற்கிடையில், நியூசிலாந்து தொடரை சமன் செய்ய முனையும். முதல் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான ஆட்டத்தால், ஆக்லாந்தில் சுப்மன் கில் தலைமையிலான அணி நியூசிலாந்தை வெறும் 185 ரன்களுக்குள் சுருட்டியது. மழையால் தடைபட்ட அந்தப் போட்டியில், விராட் கோலி 51 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அதிரடியாக ஆடி, 23வது ஓவரில் அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். இனி கோலியிடமிருந்து மற்றொரு சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: இந்தியா vs நியூசிலாந்து 2வது ஒருநாள்.. முகமது சிராஜ் வரவு.. அகிப் நபிக்கு ஆபத்தா?




இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நேரலை ஒளிபரப்பு விவரம்:
Auckland ✅
Hello from Wellington as the focus shifts to the 2️⃣nd ODI 👋
#TeamIndia | #NZvIND https://t.co/3VkE8rikR8
— BCCI (@BCCI) November 5, 2026
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி எப்போது நடைபெறும்?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி, 2026 நவம்பர் 7ம் தேதியான நாளை நடைபெறும்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி எங்கு நடைபெறும்?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் நடைபெறும்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி எத்தனை மணிக்குத் தொடங்கும்?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்குத் தொடங்கும். டாஸ் காலை 7:00 மணிக்கு நடைபெறும்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியை எந்த தொலைக்காட்சி சேனலில் பார்க்கலாம்?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் காணலாம்.
ALSO READ: வெலிங்டனில் இந்தியா – நியூசிலாந்து 2வது ஒருநாள்.. மழையால் போட்டிக்கு அச்சுறுத்தல்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியைப் பார்க்க எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்..?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியை சோனி லிவ் (Sony Liv) ஆப்பில் பார்க்கலாம்.