AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: இந்தியா vs நியூசிலாந்து 2வது ஒருநாள்.. முகமது சிராஜ் வரவு.. அகிப் நபிக்கு ஆபத்தா?

IND vs NZ 2nd ODI Team India Playing XI: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை (நவம்பர் 7, 2026) வெலிங்டனில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அணியுடன் இணைந்துள்ளார். சிராஜ் களமிறங்குவாரா, அகிப் நபிக்கு பதிலாக வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிட்ச் நிலவரம், வீரர்களின் பணிச்சுமை ஆகியவற்றின் அடிப்படையில் அணி நிர்வாகம் முடிவெடுக்கும்.

IND vs NZ: இந்தியா vs நியூசிலாந்து 2வது ஒருநாள்.. முகமது சிராஜ் வரவு.. அகிப் நபிக்கு ஆபத்தா?
இந்திய அணியின் பிளேயிங் லெவன்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Nov 2026 17:43 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அதாவது 2026 நவம்பர் 7ம் தேதி மதியம் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் (Indian Cricket Team) வேகப்பந்து வீச்சுத் தாக்குதலுக்கு ஒரு பெரிய உத்வேகம் கிடைத்துள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், இந்திய அணியுடன் இணைவதற்காக வெலிங்டன் வந்தடைந்துள்ளார். கடந்த 2024 நவம்பர் 4ம் தேதி ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சிராஜ் இடம்பெறவில்லை. ஏனெனில், சிராஜ் நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணிக்காக விளையாடி வந்தார்.

ALSO READ: டெல்லி வேண்டாம்.. முக்கிய போட்டியை விசாப்பட்டினத்திற்கு மாற்றிய பிசிசிஐ!

இந்தநிலையில், வருகின்ற 2026 நவம்பர் 19ம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக சிராஜ் இந்தியா ‘ஏ’ அணியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக முகமது சிராஜ் தற்போது இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார்.

முகமது சிராஜுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா?

2026 நவம்பர் 7ம் தேதியான நாளை வெலிங்டனில் நடைபெறும் போட்டியில், தொடரில் தனது முன்னிலையை இந்தியா வலுப்படுத்த முயற்சிக்கும். இருப்பினும், சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவர் இறுதி பதினொரு பேர் கொண்ட அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வெலிங்டனின் சூழ்நிலைகள், ஆடுகளத்தின் தன்மை, மற்றும் மு32தல் ஒருநாள் போட்டியில் விளையாடிய பந்துவீச்சாளர்களின் செயல்பாடு மற்றும் பணிச்சுமை ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே, அணி நிர்வாகம் அணியை இறுதி செய்யும்.

யாருக்கு பதிலாக வாய்ப்பு கிடைக்கும்..?

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் முகமது சிராஜ் அணிக்குத் திரும்பினால், அவருக்குப் பதிலாக யார் இடம்பெறுவார் என்ற கேள்வி எழுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முகமது சிராஜ் விளையாடினால், அகிப் நபி அணியிலிருந்து நீக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. தொடரின் முதல் போட்டிக்கான ஆடும் லெவனில் அகிப் நபி இடம்பெற்றிருந்தார். அதில், நபி ஆறு ஓவர்களில் 33 ரன்களை விட்டுக்கொடுத்தார், ஆனால் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. மறுபுறம், மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த சூழ்நிலையால், முகமது சிராஜின் வருகையால் அகிப் நபியின் இடத்திற்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ALSO READ: நியூசிலாந்துடன் மோதல்.. வெலிங்டனில் இந்திய அணியின் சாதனை எப்படி..?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, சுப்மான் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார், நமன் திர், அகிப் நபி,  ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான்.

Follow Us