AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளிக்கு டிக்கெட் கிடைக்கலையா.. கன்னியாகுமரிக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Deepavali Special Train : தீபாவளி பண்டிகையையொட்டி, பொது மக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி , திருநெல்வேலி , நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் நாளை சனிக்கிழமை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது .

தீபாவளிக்கு டிக்கெட் கிடைக்கலையா.. கன்னியாகுமரிக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 06 Nov 2026 18:28 PM IST

நாடு முழுவதும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 8- ஆம் தேதி) தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு வசதியாக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு அரசு பேருந்துகளும் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. இதனால், சிறப்பு ரயில் மற்றும் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பொது மக்களுக்காக சிறப்பு ரயில் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்பட உள்ளது.

சென்னை டூ கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்களின் வசதிக்காக சென்னை டூ கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் நாளை இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது ( வண்டி எண்: 06183) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நாளை சனிக்கிழமை ( நவம்பர் 7- ஆம் தேதி) பிற்பகல் 12:30 மணிக்கு புறப்படுகிறது. அன்று இரவு 12:30 மணி அளவில் கன்னியாகுமரியை சென்று அடையும். இந்த ரயிலில் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது,

மேலும் படிக்க: திருச்சியில் பெரும் சோகம்.. மனைவி தற்கொலை செய்த அதே மின்விசிறியில் தூக்கிட்ட கணவன்.. என்ன காரணம்!

  • தாம்பரம்.
  • செங்கல்பட்டு.
  • மேல்மருவத்தூர்.
  • விழுப்புரம்.
  • விருத்தாச்சலம்.
  • அரியலூர்.
  • ஸ்ரீரங்கம்.
  • திருச்சி.
  • திண்டுக்கல்.
  • கொடைக்கானல் ரோடு.
  • மதுரை.
  • விருதுநகர்.
  • சாத்தூர்.
  • கோவில்பட்டி.
  • திருநெல்வேலி.
  • நாங்குநேரி.
  • வள்ளியூர்.
  • நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்

பொதுமக்கள் இந்த சிறப்பு விரைவு ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ரயில், பேருந்து மற்றும் கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் பயணிகள் கூட்டம் அதிக அளவு காணப்படுகிறது.

சுமார் 2 லட்சம் பொது மக்கள் சொந்த ஊர் பயணம்

அத்துடன் வண்டலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து சென்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 2 லட்சம் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க: அரசு அலுவலக வங்கி கணக்கில் கை வைத்த ஹேக்கர்ஸ்.. ரூ. 11 லஞ்சம் கொள்ளை.. நாகை சைபர் கிரைம் போலீஸ் விசாரணை!

Follow Us