AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செமிகான் 2.0 இணையதளத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் – 12 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல்!

இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், செமிகான் 2.0 திட்டத்திற்கான புதிய இணையதளத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நவம்பர் 6, 2026 இன்று தொடங்கி வைத்தார். இது இந்திய செமிகண்டக்டர் இயக்கத்தின் கீழ் ரூ.1,27,500 கோடி நிதியில் செயல்படுத்தப்படவுள்ளது.

செமிகான் 2.0 இணையதளத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் – 12 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல்!
Union Minister Ashwini Vaishnaw
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 Nov 2026 19:27 PM IST

இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், செமிகான் 2.0 திட்டத்திற்கான புதிய இணையதளத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நவம்பர் 6, 2026 இன்று தொடங்கி வைத்தார். இது இந்திய செமிகண்டக்டர் இயக்கத்தின் கீழ் ரூ.1,27,500 கோடி நிதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில், இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், புதிய சிப் உற்பத்தி ஆலைகள், செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் சோதனைத் துறை ஆகிய 3 பிரிவுகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

கவனம் செலுத்தப்படவுள்ள 6 முக்கிய அம்சங்கள்

  1. சிப் வடிவமைப்பு
  2. இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களின் விநியோகம்
  3. கூடுதல் உற்பத்தி ஆலைகளை நிறுவுதல்
  4. ATMP-OSAT துறையை வலுப்படுத்துதல்
  5. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
  6. திறமையான பணியாளர்களை உருவாக்குதல்

மேற்கூறிய அம்சங்களில் 2, 3 மற்றும் 4வது பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள், புதிதாக உருவாக்கப்பட்ட இணையதளம் வாயிலாக தற்போது பெறப்படுகின்றன.

12 திட்டங்களுக்கு அனுமதி

ஏற்கனவே ரூ.69,548 கோடி முதலீட்டில் 106 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தற்போது கூடுதலாக 12 திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த 12 திட்டங்களின் மூலம் ரூ.7,503 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்றும், சுமார் ரூ.39,045 கோடி மதிப்பிலான பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவை 7,127 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இந்த உற்பத்தி அலகுகள் குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் அமைக்கப்படவுள்ளன. நாட்டில் முதன்முறையாக, காப்பர் ஃபாயில் , கேத்தோடு ஆக்டிவ் மெட்டீரியல் மற்றும் சிறப்பு செராமிக்ஸ் ஆகியவற்றை உற்பத்தி செய்ய ECMS திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மல்டி-லேயர் பிசிபி தயாரிப்பிற்கு ‘நெஸ்ட் ஐசிஇஎல்ஆர்’ நிறுவனத்திற்கும், ரிலேக்கள் தயாரிப்பிற்கு ‘டிடிகோனெக்ஸ்’நிறுவனத்திற்கும், ஹீட் சிங்க் தயாரிப்பிற்கு ‘மாடர்ன் ஆட்டோமோட்டிவ்ஸ்’ நிறுவனத்திற்கும், மற்றும் சிறப்பு செராமிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர்கள் தயாரிப்பிற்கு ‘வோல்டிக்ஸ்’ நிறுவனத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், லித்தியம்-அயன் பேட்டரிகளுக்குத் தேவையான காப்பர் ஃபாயில், ஆனோடு மற்றும் கேத்தோடு பொருட்கள் போன்ற விநியோகச் சங்கிலி உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதற்கான வழிவகைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, ECMS (மின்னணு உதிரிபாகங்கள் மற்றும் உற்பத்தித் திட்டம்) திட்டத்தின் கீழ், 16 மாநிலங்களில் 34 வெவ்வேறு தயாரிப்புகளை உள்ளடக்கிய 118 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவின் மின்னணுத் துறை வெறும் தயாரிப்பு ஒருங்கிணைப்பு என்ற நிலையைக் கடந்து, தற்போது உதிரிபாகங்கள், உபகரணங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிலையை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சுமார் 50 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் (MSME) சேர்ந்தவை என்று தெரிவித்தார்.

Follow Us