AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஊழல் உலகமாக மாறிய பெரியார் அறிவுலகம்.. மக்கள் மன்றத்தில் திமுக நிரந்தரமாக தலை குனிவது உறுதி.. முதல்வர் விஜய் அட்டாக்!

CM Vijay Criticized DMK : கடந்த திமுக ஆட்சியில் பெரியார் அறிவுலகத்தையை ஊழல் உலகமாக மாற்றி உள்ளதாகவும், மக்கள் மன்றத்தில் திமுக நிரந்தரமாக தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி என்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஊழல் உலகமாக மாறிய பெரியார் அறிவுலகம்.. மக்கள் மன்றத்தில் திமுக நிரந்தரமாக தலை குனிவது உறுதி.. முதல்வர் விஜய் அட்டாக்!
மு.க.ஸ்டாலின் - முதல்வர் விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 06 Nov 2026 14:37 PM IST

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் திமுக ஊழல் செய்தது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள் தான், தமிழ் மொழியை கண்டுபிடித்ததே நாங்கள் தான், தமிழ் இலக்கிய கடலே எங்கள் சட்டை பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள் தான் என்று உரக்க கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம் ஊழலின் ஊற்று கண்ணான திமுக தான் என்பது ஊரறிய வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான புத்தகங்கள் பரிந்துரை குழு அமைக்கப்பட்டு கடந்த திமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

ஊழலின் ஊற்றுக் கண்ணே திமுக தான்

அந்த குழுவில் நவீன இலக்கியங்கள், திறனாய்வு புத்தகங்களை பரிந்துரைக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த பேராசிரியர் பெருமாள் முருகனே பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். நாம் அரசியலுக்கு வந்த போதே பெரியார் பெயரை வைத்து கொள்ளை அடித்து வருவது திமுக தான் என்று பகிரங்கமாக அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே திமுக தான் என்பதையும் இன்றுவரை சமரசம் இன்றி சொல்லி வருகிறோம்.

மேலும் படிக்க: இடைத்தேர்தலே அறிவிக்கல.. அதுக்குள்ள பட்டுவாடாவா.. விராலிமலையில் ரூ.2 ஆயிரம் பரிசு பொருள்கள் விநியோகம்.. ரகுபதி குற்றச்சாட்டு!

பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக

இதனை திமுகவே உண்மை என நிரூபித்துள்ளது. இதற்கு உதாரணமாக கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள நூல்கள் கொள்முதல் ஊழலே சாட்சியாக உள்ளது. திமுக சற்று வித்தியாசமாக ஊழல் செய்து பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியுள்ளது. ஊழல் இலக்கியம் படைப்பதில் திமுக உயர் ரகம்தான் என்பது தெரியவந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தை பார்த்து பார்த்து கட்டியதாக தம்பட்டம் அடித்த திமுக தலைமை தரமற்ற நூல்களை பரிந்துரை செய்து ஊழல் செய்ததையும் உலகமே கை கொட்டி சிரிக்கிறது.

மக்கள் மன்றத்தில் திமுக நிரந்தரமாக தலை குனிந்து நிற்பது உறுதி

கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி துறையில் ஊழல், டாஸ்மாக்கில் ஊழல், டெண்டர்களில் ஊழல், ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் என தங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் திமுக. இந்த வரிசையில் பள்ளிக்கல்வித்துறையிலும் ஊழல் நடந்து அதில் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. மக்கள் வாழ்வை பாதிக்கும் வகையில் ஊழல் செய்யும் திமுகவை வருங்கால தலைமுறை மன்னிக்காது. மக்களும் திமுகவை அப்புறப்படுத்தாமல் விட மாட்டார்கள். இனி மக்கள் மன்றத்தில் திமுகவால் நிமிரவே முடியாமல் நிரந்தரமாக தலை குனிந்து நிற்கப் போவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: யாருய்யா நீ எங்கய்யா இருக்க.. இந்த காலத்தில் இப்படியொரு மருமகனா.. சென்னையில் ரூ.1.5 கோடியில் மாமனாருக்கு கோயில் கட்டி வழிபாடு!

Follow Us