AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“பெரியார் பெயரிலும் ஊழலா?” .. திமுக ஆட்சியில் நூலகப் புத்தக கொள்முதலில் நடந்த மெகா ஊழல்.. அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசம்!

Minister Rajmohan slams dmk on Periyar library corruption: பெரியார் நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் கடந்த தி.மு.க. ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகக் கூறி ராஜ்மோகன் கடுமையாகச் சாடியுள்ளார். தரம் குறைந்த நூல்கள், கற்பனையான பதிப்பகங்கள் மற்றும் கூகுளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் நடைபெற்ற இந்த முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பெரியார் பெயரிலும் ஊழலா?” .. திமுக ஆட்சியில் நூலகப் புத்தக கொள்முதலில் நடந்த மெகா ஊழல்.. அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசம்!
பெரியார் அறிவுலகம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Nov 2026 14:05 PM IST

சென்னை, நவ.06: தமிழ்நாட்டில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் (நூலகம்) மற்றும் அது தொடர்பான அரசியல் விவாதங்கள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. நூலகத்தை யார் திறந்தது, யாருடைய நிதியிலிருந்து கட்டப்பட்டது என்பது குறித்தான வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அந்த நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அரங்கேறியுள்ள முறைகேடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்துத் தீவிரமாக விமர்சித்து பேசியுள்ள அமைச்சர் ராஜ்மோகன், கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நூலகப் புத்தக வாங்குதலில் நடைபெற்ற மெகா ஊழல் குறித்துப் புட்டுப் புட்டு வைத்துள்ளார்.

இதையும் படிக்க: தமிழக அரசு வங்கி கணக்கை ஹேக் செய்த கேரள சைபர் கும்பல்.. கருவூலக் கணக்கை முடக்கி ரூ.11 லட்சம் திருட்டு!

நூலக கொள்முதலில் அரங்கேறிய விநோத குளறுபடி:

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு நூலகப் புத்தகங்களை ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ராஜ்மோகன் குறிப்பிடப்பட்டுள்ளார். எந்தப் பதிப்பகத்தைச் சேர்ந்தவர்கள் என்றே தெரியாத நபர்களிடமிருந்து ஒரே பதிப்பகத்தில் 1500க்கும் மேற்பட்ட நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், செவ்வாய்க்கிரகத்தில் கூட இல்லாத விநோதப் பெயர்களில் பதிப்பகங்கள் இயங்கி வருவதாகவும் விமர்சித்துள்ளார். குறிப்பாக, தேவநிலவன் என்ற எழுத்தாளரின் கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பான புத்தகத்தில் இடம்பெற்ற புகைப்படங்கள் கீழடியிலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல என்றும், 50 ஆண்டுகளுக்கு முன் கூகுளில் பெறப்பட்ட பழைய நந்தி சிலைகளின் புகைப்படங்களை அதில் இணைத்துள்ளதாகவும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்த திமுக:

பாரதியார் கதைகள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட புத்தகங்களின் தரம் பத்தாம் வகுப்பு மாணவன் எழுதும் கட்டுரையை விட மோசமாக உள்ளதாகவும், பெரியாரின் பெயர் சூட்டப்பட்ட நூலகத்திலேயே இதுபோன்ற முறைகேடுகள் இழைக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடான ஒன்று என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். பொதுமக்களின் வரிப்பணத்தை வைத்துக்கொண்டு கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற போலியான கொள்முதல்களும் ஊழல்களும் அரங்கேறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளார். ஆரம்பக் கட்டப் பணம் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள தொகைகளை முடக்கி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இதையும் படிக்க: சட்டம் அனைவருக்கும் சமம்! முதல்வர் விஜய்- ஜெகன்மோகன் ரெட்டி பேனர் அகற்றம்.. சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

சட்டத்தின் முன் குற்றவாளிகள் நிறுத்தப்படுவார்கள்:

மக்களின் பணத்தை முறைகேடாகச் சுருட்டியவர்கள் எவராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும், தவறு செய்தவர்கள் மீதும் இதற்குப் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை வழங்கும் தற்போதைய ஆட்சியில் இதுபோன்ற ஊழல்களுக்கு இடமில்லை என்றும், முறைகேடுகள் மீது சமரசமற்ற அதிரடி விசாரணைகள் தொடரும் என்றும் திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us