AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி எதிரொலி.. தேர்தல் ஆணையத்திற்கும், தவெக எம்எல்ஏவுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

Tirupattur Election Petition Filed by DMK: திருப்பத்தூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. ஸ்ரீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையத்திற்கும் எம்.எல்.ஏ.-வுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தமிழக அரசியலில் மீண்டும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி எதிரொலி.. தேர்தல் ஆணையத்திற்கும், தவெக எம்எல்ஏவுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
பெரியகருப்பன், தவெக எம்எல்ஏ,
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Nov 2026 12:59 PM IST

திருப்பத்தூர், நவ.06: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றும் வெற்றி தோல்வி முடிவுகள் மாநில அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக, மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட தொகுதிகளில் ஒன்றான திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட சட்டப்போராட்டம் தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், இச்சம்பவம் தமிழக அரசியலில் மீண்டும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: தனுஷின் ‘ஓம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா.. ‘எங்கள் இயக்கத்தின் முதல்வரே’ என்ற அரசியல் வாசகத்தால் பரபரப்பு..

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி:

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் தவெக சார்பில் களமிறங்கிய ஸ்ரீனிவாச சேதுபதிக்கும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் தரப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தவெக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் (33,375 வாக்குகள் பெற்று) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பெரியகருப்பன் 33,374 வாக்குகளைப் பெற்று மிகக் குறுகிய வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்தத் தேர்தல் முடிவு அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது.

தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு:

திருப்பத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடுகள் நடைபெற்றதாகவும், தனது வெற்றியைச் சவாலுக்கு உட்படுத்தித் தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் அபிரேஷ் குமார் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் விரிவாக ஆராய முடிவு செய்தனர்.

இதையும் படிக்க: புதிய திரைப்படங்களுக்கு 6 மணி காட்சிகளுக்கு அனுமதியா?.. பொதுமக்களின் பாதுகாப்பை பணையம் வைப்பதா?.. தமிழக அரசுக்கு திமுக கடும் கண்டனம்!

உச்சநீதிமன்றத்தின் நோட்டீஸ் உத்தரவு:

வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம், தவெக எம்.எல்.ஏ. ஸ்ரீனிவாச சேதுபதி மற்றும் தேர்தல் ஆணையம் ஆகிய தரப்பினருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பதிலளிக்குமாறு அவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இவ்வழக்கின் மீதான அடுத்தடுத்த கட்ட விசாரணைகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தவெக எம்.எல்.ஏ-வின் வெற்றி செல்லுமா இல்லையா என்பது குறித்த சட்டப்பூர்வ முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us