Mr Bhaarath: கலக்கல் காமெடி கதையில்… நடிகர் பாரத்தின் மிஸ்டர் பாரத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
Mr. Bhaarath Movie Trailer: தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து சினிமாவில் நுழைந்தவர் நடிகர் பாரத். இவர் லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நண்பனாக நடித்து சினிமாவில் பிரபலமானார். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய திரைப்படம்தான் மிஸ்டர் பாரத். இந்த படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இதன் கலக்கல் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் துணை நடிகராக படங்களில் நடித்து, தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ளவர்தான் நடிகர் பாரத் (Bhaarath). இவர் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) லவ் டுடே (Love Today Movie) திரைப்படத்தில் அவருக்கு நண்பனாக நடித்து சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார். அந்த விதத்தில் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே இவர் ஹீரோவாக மிஸ்டர் பாரத் (Mr. Bhaarath) என்ற படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை இயக்குநர் நிரஞ்சன் (Directotor Niranjan) இயக்க, லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) ஜி ஸ்குவாட் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவந்தது. இந்த படமானது கலக்கல் காமெடி மற்றும் வித்தியாசமான கோணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த விதத்தில் இந்த படமானது முழுவதுமாக தயாராகியுள்ள நிலையில், இப்படத்திலிருந்து படங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அந்த விதத்தில் தற்போது இப்படத்திலிருந்து படக்குழு ட்ரெய்லரை பகிர்ந்துள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: பிக் பாஸில் 2 சீரியல் கில்லர்ஸ்.. போலீஸ் அதிகாரியாக டிடிஃஎப் வாசன் – சூடுபிடிக்கும் ஆட்டம் – ப்ரோமோ இதோ!
மிஸ்டர் பாரத் திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:
இந்த ட்ரெய்லரானது கலக்கல் காமெடி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மிஸ்டர் பாரத் இப்படத்தின் ட்ரெய்லர் மிகவும் காமெடியாக அமைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் பாரத் ஒரு வித வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஃபன் இருக்கு.. திரில்லர் இருக்கு.. சர்ப்ரைஸ் இருக்கு.. சூர்யா – நஸ்ரியாவின் சீன் திரைப்படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!
இப்படத்தில் அவர் ஒருவித வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். சாதாரணமான நபரை போல இல்லாமல், அவரின் செயல்கள் எல்லாமே வித்தியாசமாக உள்ளது. எதையும் வெளிப்படையாக பேசும் நபராக அவர் நடித்திருக்கிறார். இந்த ட்ரெய்லரை பார்க்கையில் படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது என தெரிகிறது.
மிஸ்டர் பாரத் படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
The wait is over! 🔥
#MrBhaarath Trailer Out Now 😎▶️ https://t.co/hW1ZTCDbQA
@Bhaarath_Offl @samyukthavv @Niranjan_Dir @Dir_lokesh @Sudhans2017 @Jagadishbliss @PassionStudios @GSquadOffl @TheRoute @PradeepBoopath2
@Bala_actor #Nidhipradeep #Sunderrajan @adithya_kathir
@om20narayan @Dhivakeryahooi1 @PranavMuniraj @BhavnaGovardan @azarchoreo @valentino_suren @alagiakoothan @amudhanpriyan @thinkmusicindia @SureshChandraa @AbdulNassarOffl @DoneChannel1
— GSquad (@GSquadOffl) November 6, 2026
மிஸ்டர் பாரத் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த மிஸ்டர் பாரத் படத்தை இயக்குநர் நிரஞ்சன் இயக்கியுள்ள நிலையில், இப்படத்தின் வசங்கள் மற்றும் கதை சிறப்பாக அமைந்திருக்கிறது. இப்படத்தில் நடிகர் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பாலா சரவணன், நிதிப்ரதீப் மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறதாம். அதை முன்னிட்டு தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.