பிக் பாஸில் 2 சீரியல் கில்லர்ஸ்.. போலீஸ் அதிகாரியாக டிடிஃஎப் வாசன் – சூடுபிடிக்கும் ஆட்டம் – ப்ரோமோ இதோ!
Bigg Boss 10 Promo: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த வாரத்தில் பிபி திருந்துங்கடா அகாடமி டாஸ்க் நடக்கும் நிலையில், அந்த டாஸ்கிற்குள்ளே சீரியல் கில்லர்ஸ் டாஸ்க்கும் நடக்கிறது. இந்நிலையில் அந்த சீரியல் கில்லர்களை கண்டுபிடிக்க டிடிஃஎப் வாசன் போலீசாக விசாரிக்கும் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது 2026 செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கிய நிலையில், இன்றுடன் (06/11/2026) 61 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிலையில், தற்போது வெறும் 14 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் வார வாரம் டீம் டாஸ்க் நடக்கும் நிலையில், அதுபோலவே இந்த வாரத்திற்கு பிபி திருந்துங்கடா அகாடமி என்ற ஸ்கூல் டாஸ்க் ஓன்று நடந்துவருகிறது. இந்த டாஸ்கின்போதே உள்ளே போட்டியாளர்களுக்கு சீக்ரட் டாஸ்க்கும் கொடுக்கப்படுகிறது.
ஜேசன் மற்றும் அஸ்மிதா இருவருமே இந்த டாஸ்கில் சீரியல் கில்லர்களாக சக போட்டியாளர்களை தோல்வியடைய செய்துவரும் நிலையில், அந்த சீரியல் கில்லர்களை கண்டுபிடிப்பதற்கான போலீஸ் அதிகாரியாக டிடிஃஎப் வாசன் நிர்ணயிக்கப்படுகிறார். இது தொடர்பான மாஸ் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: தெய்வசக்தி Vs தீயசக்தி.. 90ஸ் படம் போல இருக்கிறதா மூக்குத்தி அம்மன் 2..? – விமர்சனங்கள் இதோ!
பிக் பாஸில் சீரியல் கில்லர்களை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரியாக டிடிஃஎப் வாசன்:
இந்த ப்ரோமோவில், பிக் பாஸ், இந்த வீட்டில் சீரியல் கில்லர்களாக மறைந்து சக போட்டியிலர்களை டார்கெட் செய்துவரும் அவர்களை கண்டறிவதற்கு டிடிஃஎப் வாசன் விசாரணை அதிகாரியாக வருகிறார். அண்ட் சீரியல் கில்லர்களை கண்டறிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி, டான் போர்வையில் ஒளிந்திருந்த மாஃபியா மாணிக் (டிடிஃஎப் வாசன்).
இதையும் படிங்க: ஃபன் இருக்கு.. திரில்லர் இருக்கு.. சர்ப்ரைஸ் இருக்கு.. சூர்யா – நஸ்ரியாவின் சீன் திரைப்படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!
இவ்வளவு நாளாக சாதாரணமாக அனைவரையும் விசாரித்துவந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக விசாரிக்கவேண்டும் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். தற்போது இது குறித்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 61வது நாளின் முதல் ப்ரோமோ குறித்த பதிவு:
#Day61 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/4fJgE0M9qc
— Vijay Television (@vijaytelevision) November 6, 2026
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 9வது வாரத்தின் முடிவில் இருக்கும் நிலையில், இந்த வாரத்தில் கிட்டத்தட்ட 9 போட்டியாளர்கள் நாமினேஷனில் உள்ளனர். அந்த விதத்தில் இந்த வாரம் தீபாவளி வாரம் என்ற நிலையில், எவிக்ஷன் இருக்காது என கூறப்படுகிறது. எது என்ன என பொறுத்திருந்து பார்க்கலாம்.