AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Scene: ஃபன் இருக்கு.. திரில்லர் இருக்கு.. சர்ப்ரைஸ் இருக்கு.. சூர்யா – நஸ்ரியாவின் சீன் திரைப்படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

Suriya And Nazriyas Scene Movie Review: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியாகியுள்ள 3வது திரைப்படம்தான் சீன். இந்த படமானது இன்று (06/11/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.

Scene: ஃபன் இருக்கு.. திரில்லர் இருக்கு.. சர்ப்ரைஸ் இருக்கு.. சூர்யா – நஸ்ரியாவின் சீன் திரைப்படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!
சீன் திரைப்பட விமர்சனங்கள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Nov 2026 10:52 AM IST

கோலிவுட் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் லீட் நாயகனாக இருந்துவருபவர் நடிகர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இந்த ஆண்டில் இவரின் நடிப்பில் ஏற்கனவே கருப்பு (Karuppu) மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons) என இரு திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இந்த படத்தினை தொடர்ந்து 3வது திரைப்படமாக இன்று (06/11/2026) வெளியாகியுள்ள திரைப்படம்தான் சீன் (Scene Movie). இந்த படத்தி மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Director Jithu Madhavan) இயக்கியிருந்த நிலையில், சூர்யா தனது புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார்.

இந்த திரைப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் வேடிக்கை நிறைந்த திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நஸ்ரியா, நஸ்லேன் மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: வெளியானது சூர்யாவின் சீன் படத்தின் ஆல்பம்… உங்களுக்கு பிடிச்ச பாட்டு எது?

சூர்யா மற்றும் நஸ்ரியாவின் சீன் திரைப்படம் எப்படி இருக்கு:

இந்த சீன் திரைப்படத்தின் முதல் பாதி வேடிக்கையாகவும் நன்றாகவும் இருக்கிறதாம், ஆனால் அதனுடன் ஒப்பிடும்போது, ​​இரண்டாம் பாதி வேடிக்கை, ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் அம்சங்களின் சரியான கலவையுடன் வேற லெவலில் உள்ளது. இப்படத்தில் பல எதிர்பாராத சர்ப்ரைஸ் உள்ளதாம்.

முதல் 30 நிமிடங்கள் சற்று வித்தியாசமான கதை சொல்லும் அணுகுமுறையைக் கொண்டுள்ளன, ஆனால் ஒரு கேமியோ ரோலுக்குப் பிறகு, படம் முற்றிலும் திசைமாறி, மேலும் ஈர்க்கக்கூடியதாகவும், பொழுதுபோக்காகவும், வேடிக்கை நிறைந்ததாகவும் மாறுகிறது.

சூர்யா – நஸ்ரியாவின் நடிப்பு எப்படி இருக்கு:

இப்படத்தில் சூர்யாவின் தோற்றமும் மற்றும் அவரின் கதாபாத்திரமும் முற்றிலும் வித்தியாசமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறதாம். நடிகை நஸ்ரியா மிகவும் அழகாக இப்படத்தில் காட்டப்பட்டுள்ளாராம். அவர் இப்படத்தில் முதல் 50 நிமிடங்களுக்குப் பிறகுதான் கதைக்குள் நுழைகிறார், அங்கிருந்து, வேடிக்கை மற்றும் ஆக்‌ஷனின் அற்புதமான கலவையுடன் படம் சூடு பிடிக்கிறது. மேலும் நடிகர் நஸ்லென் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: தென்னிந்தியத் திரைத் துறை குறித்து வட இந்திய நடிகர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது – நடிகை ரெஜினா கசாண்ட்ரா!

சூர்யாவின் சீன் படத்தின் சர்ப்ரைஸ்:

இந்த சீன் திரைப்படத்தில் எந்த ரசிகர்களும் எதிர்பார்த்திராத சர்ப்ரைஸ் உள்ளதாம். இந்த படத்தில் கேமியோ வேடத்தில் இரு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்களாம். மலையாள நடிகர் ஒருவரும், தமிழ் நடிகை ஒருவரும் இப்படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்களாம்.

சூர்யாவின் சீன் படத்தை திரையரங்குகள் சென்று பார்க்கலாமா?:

சூர்யா மற்றும் நஸ்ரியாவின் ஜோடி இப்படத்தில் அருமையாக உள்ளது. இரண்டாம் பாதி முழுவதும் வேடிக்கையும், ஆக்‌ஷனும் நிறைந்துள்ளது. இப்படமானது உங்களுக்கு ஒரு முழுமையான மலையாள சினிமா அனுபவத்தைத் தருகிறது. ஆக மொத்தத்தில் நகைச்சுவை, திரில்லர் மற்றும் மலையாள படம் போல திரைப்படத்தை பார்க்க எண்ணுபவர்கள் நிச்சயம் சீன் படத்தை திரையரங்குகள் சென்றுபார்க்கலாம். படம் வேற லெவல் என ரசிகர்களும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டுவருகிறார்கள்.

Follow Us