Suriya
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் தான் நடிகர் சூர்யா. கடந்த 1973-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதி பிறந்தார் நடிகர் சூர்யா. இவரது இயற்பெயர் சரவணன் ஆகும். படத்திற்காக சூர்யா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். இவர் கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஒரு கார்மெண்ட்ஸில் மேனேஜராக பணியாற்றிவந்தார். இதனை தொடர்ந்து இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் சூர்யா. இதனைத் தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார் நடிகர் சூர்யா. மேலும் நடிகை ஜோதிகாவை காதலித்து வந்த நடிகர் சூர்யா 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மேலும் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி 2D என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலமாக பல ஹிட் படங்களையும் தயாரித்து வருகின்றனர்
சூர்யா- ஜோதிகாவுக்கு தூது போவதே என் வேலையா இருந்தது – கலகலப்பாக பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா!
Ramesh Khanna About Suriya Jyothika: தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துவருபவர் நடிகர் ரமேஷ் கண்ணா. இவர் சமீபத்தில் ப்ரண்ட்ஸ் பட ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இவர், சூர்யா மற்றும் ஜோதிகா காதலுக்கு தூது போன விஷயம் குறித்து பேசியுள்ளார்.
- Barath Murugan
- Updated on: Nov 18, 2025
- 22:08 pm IST
சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… கருப்பு படம் குறித்து வெளியான முக்கிய தகவல்
Karuppu Movie Update: நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இது தொடர்பாக தற்போது அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Vinothini Aandisamy
- Updated on: Nov 18, 2025
- 12:54 pm IST
சூர்யாவின் கருப்பு படத்தின் 2வது பாடல் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!
Karuppu Movie 2nd Single Update: நடிகர் சூர்யாவின் நடிப்பில் 45வது திரைப்படமாக உருவாகியிருப்பதுதான் கருப்பு. இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 2025 தீபாவளியில் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் 2வது பாடல் ரிலீஸ் எப்போது என்பது குறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அப்டேட் கொடுத்துள்ளார்.
- Barath Murugan
- Updated on: Nov 17, 2025
- 18:59 pm IST
கருப்பு படத்திற்கு முன்னதாக வெளியாகிறதா சூர்யா 46 படம்? வைரலாகும் தகவல்
Actor Suriya Movie Update: நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். அதன்படி அவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Nov 17, 2025
- 14:16 pm IST
சூர்யாவின் கேரியரை மாஸாக மாற்றிய நந்தா படம்… திரையரங்குகளில் வெளியாகி 24 வருடங்களை நிறைவு செய்தது!
24 Years Of Nandha Movie: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவின் சினிமா வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு உயர்த்தியது நந்தா படம். இந்த நிலையில் படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை தற்போது படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்
- Vinothini Aandisamy
- Updated on: Nov 14, 2025
- 17:47 pm IST
சலிப்பே தட்டாத வாரணம் ஆயிரம்.. 17 ஆண்டுகளை கடந்தும் எவர்கிரீன்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
17 Years Of Vaaranam Aayiram Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இதுவரை 44 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
- Vinothini Aandisamy
- Updated on: Nov 14, 2025
- 12:54 pm IST
Karuppu: இது God-uh Mode-uh.. யூடியூப்பில் 23 மில்லியன் பார்வைகளை தாண்டிய சூர்யாவின் கருப்பு பட பர்ஸ்ட் சிங்கிள்!
God Mode Song: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் கருப்பு. இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்க, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கடந்த 2025 தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில், இதுவரை யூடியூப்பில் 23 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
- Barath Murugan
- Updated on: Nov 12, 2025
- 18:50 pm IST
வானம் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா? 5 ஆண்டுகளை நிறைவு செய்தது சூர்யாவின் சூரரைப் போற்று படம்
5 Years Of Soorarai Pottru Movie : நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சூரரைப் போற்று. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- Vinothini Aandisamy
- Updated on: Nov 12, 2025
- 15:30 pm IST
இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கருப்பு… விரைவில் வெளியாகும் ரீலீஸ் அப்டேட்!
Karuppu Movie Update: நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Vinothini Aandisamy
- Updated on: Nov 12, 2025
- 12:41 pm IST
ஆயிரம் ஜன்னல் வீடு… 18 ஆண்டுகளை நிறைவு செய்தது சூர்யாவின் வேல் படம்!
18 Years Of Vel Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் ஆக்ஷன் ட்ராமா பாணியில் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான வேல் படம் இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
- Vinothini Aandisamy
- Updated on: Nov 8, 2025
- 21:23 pm IST
Suriya46: சூர்யா46 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்.. இத்தனை கோடியா?
Suriya46 Digital Rights: தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் தனது காலடியை பதித்துவருபவர் நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் உருமாகிவரும் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படம்தான் சூர்யா46. இந்த படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கிவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைவதற்கு முன்னே நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ளது.
- Barath Murugan
- Updated on: Nov 3, 2025
- 19:24 pm IST
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய் பீம் படம் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது!
4 Years Of Jai Bhim Movie: இயக்குநர் டி.ஜே. ஞானவேல் எழுதி இயக்கிய படம் ஜெய் பீம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
- Vinothini Aandisamy
- Updated on: Nov 2, 2025
- 13:57 pm IST
ஜனவரி 2026-ல் வெளியாகும் கருப்பு படம்? வைரலாகும் தகவல்
Karuppu Movie Release Update: நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படம் முன்னதாக தீபாவளி பண்டிகைக்கே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் வேலைகள் முடிவடையாத காரணத்தால் வெளியீடு தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்து இருந்தது.
- Vinothini Aandisamy
- Updated on: Oct 30, 2025
- 17:35 pm IST
Suriya47: பிரம்மாண்ட கூட்டணி… சூர்யாவின் 47வது படத்தில் இணையும் லோகா பட நடிகர்?
Suriya 47 Update: தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்து வருபவர் சூர்யா. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தனது 47வது படத்தில் இணைகிறார். இப்படத்தில் மலையாள பிரபலங்கள் பலரும் இணையும் நிலையில், மேலும் இப்படத்தில் லோகா பட நடிகரும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது.
- Barath Murugan
- Updated on: Oct 30, 2025
- 17:01 pm IST
Karthi: அதற்காக நானும் சூர்யா சண்டை போடுவோம்.. கார்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!
Suriya And Karthis Childhood: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி. இவர் தனது அண்ணன் சூர்யாவைப் போல் படங்களில் ஹீரோவாக நடித்து அசத்திவருகிறார். இந்நிலையில் சிறுவயதில் அவர்கள் அதிகம் சண்டைபோடும் விஷயம் என்ன என்பது குறித்து கார்த்தி ஓபனாக பேசியுளளார். அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
- Barath Murugan
- Updated on: Oct 30, 2025
- 08:30 am IST