AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என் மகன் சூர்யாவின் சினிமா வாழ்க்கைக்காக எந்த சிபாரிசும் செய்தது இல்லை – சிவகுமார்

Sivakumar talks about Suirya : தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவக்குமார். இவரது இரண்டு மகன்களும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நிலையில் மூத்த மகன் குறித்து இவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

என் மகன் சூர்யாவின் சினிமா வாழ்க்கைக்காக எந்த சிபாரிசும் செய்தது இல்லை – சிவகுமார்
மகன்களுடன் நடிகர் சிவகுமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 19 Feb 2026 17:39 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 1965-ம் ஆண்டு முதல் நடிகராக நடிக்கத் தொடங்கியவர் நடிகர் சிவகுமார். பழம்பெரும் நடிகரான இவர் தமிழ் சினிமாவில் பல நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த நடிகர் சிவகுமார் தனது நடிப்புத் திறமையின் காரணமாக பல விருதுகளையும் வென்றுள்ளார். தொடர்ந்து சினிமவில் நாயகனாக நடித்து வந்த நடிகர் சிவகுமார் அதனைத் தொடர்ந்து அப்பா கதாப்பாத்திரம், சிறப்பு வேடம் என தொடர்ந்து நடித்து வந்தார். இவர் வெள்ளித்திரையில் பல நூறு படங்களில் நடித்தது மட்டும் இன்றி சின்னத்திரையில் சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இவரது மகன்களான நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் நடிப்பும் மக்களிடிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அதன்படி சிவகுமாருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மூன்று பிள்ளைகள். அதில் இரண்டு மகன்களும் சினிமாவில் நாயகன்களாக கலக்கி வருகிறார்கள். இவர்களது நடிப்பில் தொடர்ந்து திரையுலகில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர்கள் இருவருமே தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நிலையில் சினிமாவில் இவர்களின் வரவு எப்படி என்பது குறித்து அவர்களின் தந்தையான சிவகுமார் விழா ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யாவின் சினிமா வாழ்க்கைக்காக எந்த சிபாரிசும் செய்தது இல்லை:

அதன்படி நடிகர் சிவகுமார் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட போது அவரிடம் உங்களது வீட்டில் மூன்றாவது தலைமுறையில் இருந்து நடிகர்கள் வருவார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகுமார் நான் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் நடிக்க வரவேண்டாம் என்றுதான் நினைதேன். அவர்கள் இருவரும் அவர்களின் படிப்பை முடித்துவிட்டு அதற்கான வேலையைதான் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் குழந்தையாக இருந்தபோது ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கும் கூட்டிச் செல்ல மாட்டேன். எந்த புரடெக்‌ஷன் ஹவுசிற்கும் கூட்டிக்கொண்டு சென்றதில்லை. அவர்களுக்கு சினிமா வாழ்க்கை அதுவாக அமைந்தது. அந்த மாதிரி மூன்றாவது தலைமுறை என்பது நடக்குமா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

Also Read… வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படத்தின் நிலை என்ன? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் சிவகுமாரின் பேச்சு:

Also Read… கோலிவுட் சினிமா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்… இன்று மாலை வெளியாகிறது ரஜினி – கமல் படத்தின் அறிவிப்பு