AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சர்வம் மாயா படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்த சூர்யா – ஜோதிகா தம்பதி… உற்சாகத்தில் படக்குழு!

Suriya and Jyothika congratulate Sarvam Maya Team: மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் சர்வம் மாயா படம். இந்தப் படத்தினை பாராட்டி நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

சர்வம் மாயா படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்த சூர்யா – ஜோதிகா தம்பதி… உற்சாகத்தில் படக்குழு!
சூர்யா - ஜோதிகா மற்றும் ரியா ஷிபுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Feb 2026 18:58 PM IST

தமிழ் சினிமாவில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் செலிபிரிட்டி ஜோடியாக வலம் வருகின்றனர் நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. தமிழ் திரையுலகில் இணைந்து நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்த இவர்கள் திரையுலகில் உள்ளவர்களுக்கு மட்டும் இன்றி ரசிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்றனர். இவரும் திரையுலகில் பிசியாக இருந்து வரும் நிலையில் இவர்களின் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தொடர்ந்து திரையுலகில் வெளியாகும் சிறந்த படங்களை பார்த்த பிறகு இவர்கள் இருவரும் அதனை வாழ்த்த தயங்கியதில்லை. ஆம் தொடர்ந்து சிறந்த படங்களையும் அந்தப் படங்களை நடிக்கும் நடிகர்களையும் சூர்யா – ஜோதிகா தம்பதிகள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற சர்வம் மாயா படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளனர்.

அதன்படி கடந்த 25-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மலையாள திரையுலகில் வெளியான படம் சர்வம் மாயா. இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ரியா ஷிபு நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சர்வம் மாயா படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்த சூர்யா – ஜோதிகா:

மேலும் இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நட்சத்திர ஜோடியான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சர்வம் மாயா படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர். மேலும் நடிகை ரியா ஷிபு சூர்யா மற்றும் ஜோதிகா அனுப்பிய வாழ்த்து மடலுடன் மகிழ்ச்சியாக புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஃபேமிலி எண்டெர்டெய்ன்மெண்ட் படத்தை பார்க்கணுமா? அப்போ இந்த கேஷு ஈ வீடிண்டே நாதன் படத்தை பாருங்க!

நடிகை ரியா ஷிபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தளபதி விஜய் மீது எனக்கு அளவற்ற அன்பு இருக்கிறது – சாய் அபயங்கர்