AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தளபதி விஜய் மீது எனக்கு அளவற்ற அன்பு இருக்கிறது – சாய் அபயங்கர்

Music Director Sai Abhayankar About Vijay: தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இவர் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட போது தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தளபதி விஜய் மீது எனக்கு அளவற்ற அன்பு இருக்கிறது – சாய் அபயங்கர்
சாய் அபயங்கர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Feb 2026 10:36 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகனாக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இவர் சிறு வயதில் இருந்தே இசையை ஆர்வத்துடன் கற்று வந்த நிலையில் முன்னதாக ஆல்பம் பாடல்களை உருவாக்கி அதன் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனார். ஒரு பாடலை எழுதி இசையமைத்து அந்தப் பாடலுக்கு ஏற்றவாறு காட்சிகளை அமைத்து அந்த வீடியோவை மக்களிடையே பிரபலமாக்கி கவனத்தை ஈர்த்தவர் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இந்திய சினிமாவிலேயே இளம் இசையமைப்பாளராக உள்ள சாய் அபய்ங்கர் தற்போது பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். மேலும் 2025-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான பல்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் சாய் அபயங்கர். இந்தப் படத்தில் சாய் அபயங்கர் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் வெளியான படம் டியூட். இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வெளியான இந்தப் படத்தில் சாய் அபயங்கரின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது சாய் அபயங்கரின் கைவசம் கருப்பு, பென்ஸ், மார்ஷல், AA22×A6 மற்றும் D 55 ஆகியப் படங்கள் வரிசையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் மீது எனக்கு அளவற்ற அன்பு இருக்கிறது:

இந்த நிலையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட போது நடிகர் தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி சாய் அபயங்கர் பேசியதாவது, தளபதி விஜய் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். அவர் எனக்கு ஒரு நடிகரைத் தாண்டிய ஒருவர். அவரது படைப்புகள் எனக்கு முழுமையான திருப்தியைத் தரும். அவர் மீது எனக்கு அளவற்ற அன்பு இருக்கிறது. அவர் சினிமாவை விட்டு வெளியேறுகிறார், நாங்கள் அவரை அதிகமாக மிஸ் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… சாமியாடியாக நடிகர் சிவகார்த்திகேயன்… வெளியானது சேயோன் படத்தின் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் சாய் அபயங்கர் பேச்சு:

Also Read… இந்த வார இறுதியில் வெளியாகும் AK64 டைட்டில் மற்றும் அறிவிப்பு? வைரலாகும் தகவல்