பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்து அரசுக்கு அக்கறை இருக்கிறதா.. திமுக எம்பி கனிமொழி கேள்வி!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டில் காவல் துறை என்று ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்து அரசுக்கு உண்மையில் அக்கறை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டில் காவல் துறை என்று ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்து அரசுக்கு உண்மையில் அக்கறை இருக்கிறதா, ஏனெனில் இது முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இவ்வளவு அதிகமான வழக்குகள் பதிவாகியும், அவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது இதற்கு முன் நிகழ்ந்ததே இல்லை. குழந்தைகளை துன்புறுத்தும் சம்பவங்களும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்திருக்கும் நிலையிலும், நடப்பவை குறித்து அரசுக்கு எந்தவித கவலையோ அல்லது அக்கறையோ இருப்பதாக தெரியவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
