உத்தரகாண்ட் மாநிலத்தில் 46 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், சாமியாராக தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்த சம்பவம் குடும்பத்தினரை கண்கலங்க வைத்துள்ளது. பிதோரகார் மாவட்டத்தில் உள்ள டௌலிகாட் கிராமத்தைச் சேர்ந்த புத்தி பல்லப் உபாத்யாயா என்ற சிறுவன், 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போனார். அவரது தந்தை பல ஆண்டுகள் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.