கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்து நடுத்தரக் குடும்பங்களுக்கும், நகைப்பிரியர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,680 ரூபாய் வரை குறைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.