AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஏப்ரல் 30 வரை வாய்ப்பு இல்லை… ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வைரலாகும் முக்கிய தகவல்!

Jana Nayagan Movie Release Update: தமிழ் சினிமாவில் மக்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன் . இந்தப் படத்தின் வெளியீடு குறித்து பிரபல யார்க் சினிமாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஏப்ரல் 30 வரை வாய்ப்பு இல்லை… ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வைரலாகும் முக்கிய தகவல்!
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 15 Feb 2026 10:59 AM IST

தமிழ் சினிமாமட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு படம் என்றால் அது ஜன நாயகன் தான். நடிகர் தளபதி விஜய் தொடர்ந்து தமிழில் முன்னணி நாயகனாக பலப் படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கும் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். அதன் காரணமாகவே நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படம் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. மேலும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்த ஜன நாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகாமல் தள்ளிப்போனது.

இதனைத் தொடர்ந்து ஜன நாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன் படத்தின் சென்சாரை வாங்குவதற்காக பல வழிகளில் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. மேலும் நடிகர் விஜய் தற்போது தீவிர அரசியலில் களமிறங்கி உள்ளதால் ஜன நாயகன் படத்தின் சென்சார் இந்த பிப்ரவரி மாதம் இறுதிக்குள் வந்து படம் வெளியானால் உண்டு. அப்படி சென்சார் தள்ளிப்போனால் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகே திரையரங்குகளில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தது.

ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வைரலாகும் முக்கிய தகவல்:

இந்த நிலையில் யார்க் சினிமாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அந்தப் பதிவில் யார்க் சினிமாஸ் நிறுவனம் கூறியுள்ளதாவது ஏப்ரல் 30-ம் தேதி வரை ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு இல்லை. அதன் காரணமாக முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்து டிக்கெட்டிற்கு உரிய பணத்தைப் பெறாத ரசிகர்கள் தங்களின் டிக்கெட்டை காட்டி பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். இது தற்போது சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.

Also Read… வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல்… இதயம் முரளி படத்திலிருந்து வெளியானது வான் வான் பாடல்

யார்க் சினிமாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மோகன்லாலின் த்ரிஷம் 3 படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்

Follow Us