AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மௌனம் பேசியதே ரீ-ரிலீஸ் படத்தை கண்டிப்பாக பாருங்க – திரிஷா கிருஷ்ணன் வெளியிட்ட வீடியோ!

Trishas Emotional Video : நடிகை திரிஷா கிருஷ்ணன் தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது மௌனம் பேசியதே திரைப்படம். இப்படம் ரீ-ரிலீஸாகவுள்ள நிலையில், இது குறித்து பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

மௌனம் பேசியதே ரீ-ரிலீஸ் படத்தை கண்டிப்பாக பாருங்க – திரிஷா கிருஷ்ணன் வெளியிட்ட வீடியோ!
மௌனம் பேசியதே படம் குறித்து திரிஷா Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 Feb 2026 16:44 PM IST

கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் துணை வேடத்தில் நடித்து காலடி பதித்தவர் நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவர் இயக்குநர் பிரவீன்காந்த் இயக்கத்தில் ஜோடி என்ற படத்தில், சிம்ரனின் (Simran) தோழியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரத்திற்கு பெருமளவு மதிப்பு இல்லை. இதையடுத்து இவர் கடந்த 2002ம் ஆண்டில் சூர்யாவின் (Suriya) நடிப்பில் வெளியான “மௌனம் பேசியதே” (Mounam Pesiyadhe) என்ற படத்தில் நடித்து கதநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, இயக்குநரும், நடிகருமான அமீர் (Ameer) இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலமாக தான் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தின் மூலமாக திரிஷா மற்றும் சூர்யாவின் ஜோடி முதல் முறையாக இனைந்திருந்தது. இந்த் படமானது காதல், எமோஷனல் மற்றும் காமெடி என முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இப்படமானது ரிலீஸ் செய்யப்பட்டு 23வது ஆண்டு நிறைவடைந்த நிலையில், இதை கொண்டாடும் விதத்தில் வரும் 2026 பிப்ரவரி 13ம் தேதியில் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ- ரிலீஸ் செய்யப்படுகிறது. இதை முன்னிட்டு நடிகை திரிஷா கிருஷ்ணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தாய் கிழவி பட இயக்குநருடன் சிவகார்த்திகேயன் இணையும் படம்.. ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா?

நடிகை திரிஷா கிருஷ்ணன் வெளியிட்ட வீடியோ பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

இந்த வீடியோவில் பேசியிருந்த நடிகை திரிஷா கிருஷ்ணன், இந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலமாக தான் கதாநாயகியாக முதல் அடியை எடுத்துவைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் மௌனம் பேசியதே திரைப்படம் ஒரு சிறப்பு திரைப்படம் என்று சொல்ல தேவையில்லை, எது மிகவும் சிறப்பான படம் என எல்லாருக்குமே தெரியும் என்றும் அதில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இதயம் முரளி’ படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் ஃபகத் ஃபாசில் – படக்குழு வெளியிட்ட வீடியோ!

மேலும் ரீ-ரிலீஸ் செய்யப்படும் இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகள் சென்று பார்க்கவேண்டும் என்றும், மேலும் சூர்யா, லைலா மற்றும் இப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரடிப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் அந்த வீடியோவில் நடிகை திரிஷா பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

திரிஷா மற்றும் சூர்யா ஜோடி :

இந்த மௌனம் பேசியதே திரைப்படத்திற்கு பின், திரிஷா மற்றும் சூர்யாவின் காம்போவில் ஆறு என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 19 வருடத்திற்கும் மேலாக இந்த காம்போ இணையாமல் இருந்தது. மேலும் தற்போது கருப்பு திரைப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இப்படமானது முழுமையாக தயாரான நிலையில், இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us