Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம் – வைரலாகும் தகவல்

Karuppu Movie Digital And Satellite Rights Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கருப்பு படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம் – வைரலாகும் தகவல்
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Feb 2026 11:10 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்தப் படங்கள் திரைய்ரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் சூர்யா நடிப்பில் கருப்பு, சூர்யா 46 மற்றும் சூர்யா 47 ஆகியப் படங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி இந்த வரிசையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படம் முதலாவதாக வெளியாக உள்ளது. அதன்படி இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்த அறிவிப்பு எதையும் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கருப்பு படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிறதோ இல்லையோ சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்து வைரலாகி வருகின்றது.

மேலும் இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ள நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர்.

கருப்பு பட டிஜிட்டல், சாட்டிலைட் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்:

இந்தப் படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்று மக்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஒரு அடிப்படை விலையான ரூபாய் 43 கோடிகளுக்கு வாங்கி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது சூர்யா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலாக ரீ-ரிலீஸாகும் காதலர் தினம் படம்… உற்சாகத்தில் ரசிகர்கள்!

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Shiva Rajkumar: ஜெயிலர் 2 படம் குறித்து சூப்பர் அப்டேட் சொன்ன சிவராஜ்குமார்!