AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மை லார்ட் படம் என்னை ஆழமாகப் பாதித்து – இயக்குநர் மாரி செல்வராஜ்

Director Mari Selvaraj about My Lord Movie: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மாரிசெல்வராஜ். இவர் சமீபத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி உள்ள மை லார்ட் படத்தைப் பார்த்துவிட்டு தனது கருத்தை தெரிவித்தது வைரலாகி வருகின்றது.

மை லார்ட் படம் என்னை ஆழமாகப் பாதித்து – இயக்குநர் மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Feb 2026 11:23 AM IST

தமிழ் சினிமாவில் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராம். இவருக்கு உதவி இயக்குநராக பணியாற்றி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார் மாரி செல்வராஜ். அதனைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான படங்கள் அனைத்தும் மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தனுஷின் 56-வது படத்தின் பணிகளில் பிசியாக இருக்கிறார்.

இந்த நிலையில் இயக்குநர் ராஜூ முருகன் எழுதி இயக்கிய படம் மை லார்ட். இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள நிலையில் படம் வருகின்ற 13-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ப்ரியூ காட்சியைப் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தைப் புகழ்ந்து பேசியது இணையத்தில் வைராகி வருகின்றது.

மை லார்ட் படம் என்னை ஆழமாகப் பாதித்து:

நேற்று இரவு நான் ‘மை லார்ட்’ திரைப்படத்தைப் பார்த்தேன், அந்தப் படம் என்னை ஆழமாகப் பாதித்து, மனதை மிகவும் உலுக்கியது. அது என்னுள் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. இது ஒரு அர்த்தமுள்ள மற்றும் அழுத்தமான சமூகச் செய்தியைக் கொண்ட ஒரு தரமான வணிகத் திரைப்படம். நந்தன், அயோத்தி மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்களைத் தொடர்ந்து, சசிகுமார் சாரிடமிருந்து நமது சமூகத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கும் மற்றொரு தொடர்ச்சியான தரமான படமாக ‘மை லார்ட்’ அமைந்துள்ளது.

செய்தியாளராக இருந்து இயக்குநராக மாறியுள்ள ராஜமுருகன், முக்கியமான நிஜ வாழ்க்கைச் சிக்கல்களைத் தொடர்ந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார். அவர் எளிய கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்படாத பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து, அவற்றை அர்த்தமுள்ள வெற்றிகளாக மாற்றுகிறார். அவருக்கு என் பாராட்டுகள் என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Also Read… வெற்றிமாறன் கதை சொல்லும்விதம் வித்யாசமானது – நடிகர் சிலம்பரசன் ஓபன் டாக்

இணையத்தில் வைராலும் மாரி செல்வராஜ் பேச்சு:

Also Read… பூக்கி படத்திலிருந்து வெளியானது புடிக்கலே புடிக்கலே வீடியோ பாடல்

Follow Us