நடிகர் சூர்யா படத்தை இயக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ்?
Suriya Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் உருவாகி வரும் நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில் புதுப்புதுப் படங்களில் தொடர்ந்து கமிட்டாகி நடித்து வருகிறார். நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் தொடர்ந்து படத்தின் பணிகள் முடிவடைய தாமதம் ஆன காரணத்தால் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டு தொடங்கிய போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கருப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அப்போதும் படம் வெளியாகவில்லை. மேலும் ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தெலுங்கு திரியுலகில் பிரபல இயக்குநராக வலம் வரும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்திற்காக நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.




நடிகர் சூர்யா படத்தை இயக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ்?
இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் உருவாக உள்ளது குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பர்க்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சினிமா வட்டாரங்களில் சூர்யா இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து கார்த்தி மற்றும் இன்பதி நடிக்கும் படங்களை இயக்க உள்ள நிலையில் அடுத்தகாக இந்தப் படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… Purushan Movie : பூஜையுடன் தொடங்கிய விஷால் – தமன்னாவின் புருஷன் பட ஷூட்டிங்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
As per Valaipechu,#Suriya & #MariSelvaraj to join together for a film, produced by Thanu😲
It will be Suriya’s 50th film, which will be made on a massive scale🔥Another hand MariSelvaraj has Dhanush film, Karthi Film & Inban Udhayanidhi film. Let’s see when he gonna take up… pic.twitter.com/XeYqU8enVw
— AmuthaBharathi (@CinemaWithAB) January 24, 2026
Also Read… கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணையும் பிரபல நடிகை… யார் தெரியுமா?