Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Purushan Movie : பூஜையுடன் தொடங்கிய விஷால் – தமன்னாவின் புருஷன் பட ஷூட்டிங்!

Vishals Purushan Movie Update: விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் புருஷன் படமானது சிறப்பாக தயாராகிவருகிறது. அந்த படத்தின் ப்ரோமோ நேற்று 2026 ஜனவரி 21ம் தேதியில் சுந்தர் சி-யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருந்த நிலையில், இன்று 2026 ஜனவரி 22ம் தேதியில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜை புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Purushan Movie : பூஜையுடன் தொடங்கிய விஷால் – தமன்னாவின் புருஷன் பட ஷூட்டிங்!
புருஷன் பட படப்பிடிப்பு பூஜை ஸ்டில்ஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Jan 2026 18:20 PM IST

நடிகர் விஷால் (Vishal) நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக பெரிதாக எந்த படங்களும் வெளியாகவில்லை. கடந்த 2025ம் ஆண்டில் இவரின் “மத கஜ ராஜா” (Madha Gaja Raja) என்ற படமானது வெளியாகியிருந்தது. சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில் இப்படம் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னே தயாராகியிருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த படமானது அவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்திருந்தது. இதன் பின் விஷால், தானே மகுடம் (Magudam) என்ற படத்தை இயக்கி நடித்துவருகிறார். தற்போது பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா (Tamanna Bhatia) நடிக்கிறார். ஏற்கனவே ஆக்ஷன் என்ற படத்தில் இந்த ஜோடி காமினேஷன் இணைந்து நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

இந்த படத்திற்கு படக்குழு “புருஷன்” (Purushan) என்ற டைட்டிலை வைத்துள்ளது. இது நேற்று 2026 ஜனவரி 21ம் தேதியில் சுந்தர் சி-யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை யூடியூப்பில் சுமார் 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் பூஜை தொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: புருஷன் புருஷனா இருக்கதுதான் முக்கியம்…. விஷால் – சுந்தர் சி படத்தின் டைட்டில் வீடியோ இதோ!

விஷாலின் புருஷன் பட ஷூட்டிங் பூஜை போட்டோஸ் பதிவு :

இந்த புருஷன் படத்தில் விஷால், தமன்னா மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் இதற்கு ஹிப்ஹாப் ஆதி தான் இசையமைக்கிறார். இயக்குநர் சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த நிலையில், இதன் ஷூட்டிங் சில வாரங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தற்போது விஷாலின் புருஷன் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன், காமெடி கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம்.

இதையும் படிங்க: தளபதி விஜய் என் மீது வைத்த நம்பிக்கையில் தான் கோட் படம் உருவானது – வெங்கட் பிரபு

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2026 பிப்ரவரி மாதத்தில் இருந்து துவங்கவுள்ள நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தை சுந்தர் சி இயக்கி, மற்றும் தயாரிக்கும் நிலையில், இதன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. இப்படமானது நிச்சயமாக இந்த 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.