தளபதி விஜய் என் மீது வைத்த நம்பிக்கையில் தான் கோட் படம் உருவானது – வெங்கட் பிரபு
Director Venkat Prbhu: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்தார். இது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 68-வது படம் ஆகும். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலுமி இந்தப் படத்தில் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்து இருந்தார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜோடி சேர்ந்ததை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் அவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜயின் படத்தில் வேலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




விஜய் என் மீது வைத்த நம்பிக்கையில் தான் கோட் படம் உருவானது:
இந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு சமீபத்தில் கோட் படத்திற்காக மலேசியாவில் விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கும் விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, ஒரு கமர்ஷியல் படத்திற்காக சிறந்த இயக்குநர் விருது வழங்கியதற்கு நன்றி. முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்த உடனேயே, ‘கோட்’ படத்தின் கதையின் முதல் பாதியை விஜய் சாரிடம் விவரித்தேன், அவர் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தார் அதனாலேயே இந்தப் படம் உருவானது என்று தெரிவித்தார்.
Also Read… டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அந்த கேரக்டர் நான் நடிக்க வேண்டியது – கென் கருணாஸ் ஓபன் டாக்
இணையத்தில் வைரலாகும் வெங்கட் பிரபு பேச்சு:
#VenkatPrabhu Recent
– Thank you for the Best Director award for a commercial film.
– After finishing only the first schedule, I narrated the first half of the story of #Goat to #Vijay sir, and he trusted me a lot.#TheGreatestOfAllTimepic.twitter.com/Gw5ganiK8n— Movie Tamil (@_MovieTamil) January 21, 2026
Also Read… புருஷன் புருஷனா இருக்கதுதான் முக்கியம்…. விஷால் – சுந்தர் சி படத்தின் டைட்டில் வீடியோ இதோ!