புருஷன் புருஷனா இருக்கதுதான் முக்கியம்…. விஷால் – சுந்தர் சி படத்தின் டைட்டில் வீடியோ இதோ!
Sundar C X Vishal X Hiphop Tamizha - Title Promo | தமிழ் சினிமாவில் வெற்றிக் கூட்டணியாக வலம் வருகிறது இயக்குநர் சுந்தர் சி, நடிகர் விஷால் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இவர்கள் மூவரும் இணையும் படத்தின் டைட்டில் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுந்தர் சி. இவர் சினிமாவில் இயக்குநராக மட்டும் இன்றி நடிகராகவும் வலம் வருகிறார். நடிகரும் இயக்குநருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றும் போதே பலப் படங்களின் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். பிறகு தமிழ் சினிமாவில் இயக்குநராக கொடிக்கட்டிக் பறக்கும் போது நாயகன் அவதாரம் எடுத்தார். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல நாயகனாக நடித்தப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல தற்போதும் இந்த கூட்டணி வெற்றியடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதன்படி இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைக்க உள்ளார். இயக்குநர் சுந்தர் சியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இந்தப் படத்தின் டைட்டில் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்தில் விஷால் உடன் இணைந்து நடிகர்கள் தமன்னா பாட்டியா மற்றும் யோகி பாபு இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.




விஷால் – சுந்தர் சி படத்தின் டைட்டில் என்ன?
அதன்படி இந்த படத்தின் டைட்டில் வீடியோவின் தொடக்கத்தில் யோகி பாபு ஒரு சீரியலில் புருஷ்ன் எப்படி இருக்க வேண்டும் என்று வசனம் கூறிவருகிறார். அதனை தமன்னா பார்த்துக்கொண்டிருக்கும் போது அவரது கணவர் விஷால் வீடு துடைத்துக்கொண்டு இருக்கிறார்.
அடுத்த ஷாட்டில் வீட்டின் பெல் அடிக்க வெளியே சென்று தமன்னா பார்க்கையில் அவர்களின் பக்கத்து வீட்டில்தான் சீரியல் நடிகர் யோகிபாபு இருப்பது போன்று காட்டப்படுகிறது. யோகி பாபு தமன்னாவிடம் ஜொல்லிவிட அவருக்கு டீ போட சொல்லி கணவர் விஷாலை அனுப்புகிறார் தமன்னா.
உள்ளே சென்று விஷால் டீ போடும் போது ரவுடிகள் வீட்டுள் நுழையை அவர்களை விஷால் புரட்டி எடுக்கிறார். இதனைப் பார்த்து யோகி பாபு புருஷன்னா எப்படி இருக்கனும் என்று மீண்டும் ஒரு வசம் சொல்ல படத்தின் டைட்டில் புருஷன் என்று காட்டப்படுகிறது. ஆக இந்தப் படத்தின் டைட்டில் புருஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… இது லேட்டஸ்ட் வந்தே மாதரம்… குடியரசு தின 2026 அணிவகுப்பில் இசையமைக்கும் கீரவாணி..
புருஷன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
1 Man. Many roles 😎
He’s here to serve Tea and Justice. At Once!
Tamil ▶️ https://t.co/6AuRckiHCc
Telugu ▶️ https://t.co/IzBMp0CC70#SundarC #HBDSundarC @AcsArunkumar @VishalKOfficial @hiphoptamizha @khushsundar #AnanditaSundar @vichuviswanath @Venkatt_Ragavan @benzzmedia… pic.twitter.com/qnwogBGqVe
— Avni Cinemax (@AvniCinemax_) January 21, 2026
Also Read… எனக்கு ஏதோ காதல் கதை வச்சுருக்கீங்களாமே… சுதா கொங்கராவிடம் கலகப்பாக பேசிய ரஜினிகாந்த்!