முட்ட கலக்கி பாடலுக்கு இணைந்து நடனமாடிய அய்யனார் துணை சீரியல் நடிகர்கள் – காமெடியான வீடியோ!
Ayyanar Thunai Serial: தமிழில் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் சிறப்பான சீரியலாக மக்கள் மத்தியில் பிரபலமாகிவருவது அய்யனார் துணை. இந்த சீரியல் நடிகர்கள் கென் கருணாஸின் யூத் பட முட்ட கலக்கி பாடலுக்கு இணைந்து நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகிவருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் (Vijay TV) பல சின்னத்திரை சீரியல்கள் வெளியாகிவருகிறது. அதிலும் மிக முக்கியமாக மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல்தான் அய்யனார் துணை (Ayyanar Thunai). இந்த சீரியலானது கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் சிறப்பாக ஒளிபரப்பப்பட்டுவருகிறது. இந்த சீரியலில் சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து நடித்துவந்த நடிகை மதுமிதா “நிலா” என்ற வேடத்தில் நடித்துவருகிறார். இந்த சீரியலானது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் சீரியலில் அதிகம் டிஆர்பி (TRP) பெரும் சீரியலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியல் ஒரு அம்மா இல்லாத 4 ஆண் மகன்கள் குடும்பத்தில், தாய்க்கு நிகராக அண்ணியாக நுழையும் பெண்ணின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பப்பட்டுவருகிறது. இந்த குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகள், அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனையை மையமாக கொண்டு ஒளிபரப்பப்பட்டுவருகிறது.
இந்த சீரியலானது திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 8:30 மணியளவில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்நிலையில் தற்போது இணையத்தில் மிகவும் ட்ரெண்டிங்கான பாடலாக இருந்துவருவது முட்ட கலக்கி (Mutta Kalakki). கென் கெருணாஸ் (Ken Karunas) பாடிய இந்த பாடலுக்கு, அய்யனார் சீரியல் நடிகர்கள் இணைந்து நடனமாடியுள்ளனர். இது தொடர்பான நகைச்சுவையான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: நான் என் படத்திற்கு யூத் பெயர் வைக்க இதுதான் காரணம் – கென் கருணாஸ் விளக்கம்
முட்ட கலக்கி பாடலுக்கு அய்யனார் துணை சீரிய நடிகர்கள் நடனமாடிய வீடியோ பதிவு:
View this post on Instagram
இந்த வீடியோவில் மதுமிதா, அரவிந்த், வி.ஜே.அருண், பர்வேஸ் போன்ற நடிகர்கள் இணைந்து நடனமாடுவது போன்று வெளியாகியுள்ளது. முட்ட கலக்கி பாடலுக்காக இனியானது நடனமாடும்போது எடுக்கப்பட்ட, காமெடியான தருணங்கள் மற்றும் ஒவ்வொரு முறையும் எடுக்கும்போது நடந்த நகைச்சுவையான தருணம் குறித்து இந்த வீடியோவில் உள்ளது இது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருமண கொண்டாட்டங்கள் ஓவர்.. நெக்ஸ்ட் ஷூட்டிங்கிற்கு தயாரான விஜய் தேவரகொண்டா?
தற்போது அய்யனார் துணை சீரியலானது சுவாரஸ்யமான விஷயங்களுடன் வெளியிடப்பட்டுவருகிறது. இந்த சீரியலில் பல்லவன் பிரச்சனையை தொடர்ந்து, சோழனும் புதிய பிரச்சனையில் சிக்குவது போன்று புது புது திருப்பங்களுடன் வெளியாகிவருகிறது. அந்த வகையில் தற்போது மிகவும் பிரம்மாண்டமாக தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. புது புது திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலானது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் இடத்தை பிடித்துவருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.